பிரதமர் அலுவலகம்
பீகார் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு சாம்ராட் செளத்ரிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
15 APR 2026 2:41PM by PIB Chennai
பீகார் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு சாம்ராட் செளத்ரிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திரு சாம்ராட் சௌத்ரியின் ஆற்றல், பொதுச்சேவையில் அர்ப்பணிப்பு, அடிப்படை அளவிலான அனுபவம் ஆகியவை மாநிலத்திற்கு பெரும் பயனளிக்கும் என்று பிரதமர் கூறியுள்ளார். அவருடைய தலைமையின் கீழ், பீகார் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி, அம்மாநிலம் அனைத்து துறைகளின் வளர்ச்சியிலும் புதிய உச்சத்தை எட்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பீகார் துணை முதலமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள திரு விஜய்குமார் செளத்ரி, திரு பிஜேந்திர பிரசாத் யாதவ் ஆகியோருக்கும் பிரதமர் வாழ்த்து கூறியுள்ளார்.
அவர்களுடைய அடிப்படை அளவிலான அனுபவம் மற்றும் பொதுநலனை ஒட்டிய உறுதிப்பாடு ஆகியவை பீகார் வளர்ச்சிக்கு புதிய திசையையும், உத்வேகத்தையும் உருவாக்கும் என்றும் இம்மாநிலம் சிறந்த நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்கள் நலனில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2252180)
SS/IR/RJ/KR
(रिलीज़ आईडी: 2278823)
आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam