சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா, குழந்தைகள் நலச் சிறப்புத் திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார்
प्रविष्टि तिथि:
28 JUN 2026 7:12PM by PIB Chennai
நாட்டில் பச்சிளங்குழந்தைகளுக்கான சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, புதுதில்லியில் நாளை (29.06.2026) நடைபெறவுள்ள மத்திய சுகாதார, குடும்ப நல மன்றத்தின் (CCHFW) 16-வது மாநாட்டில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா, சமக்ர சிசு பால் ஸ்வஸ்த்யா காரியக்ரம் (SSBSK) எனப்படும் அனைத்து குழந்தைகள் நலத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
பிறப்பு முதல் 36 மாத வயது வரை, வீடு, சமூகம் சார்ந்த பராமரிப்பின் தடையற்ற தொடர்ச்சியை வழங்குவதன் மூலம், ஒவ்வொரு குழந்தைக்கும் விரிவான சுகாதார பாநுகாப்பை இத்திட்டம் வழங்கும். அணுகக்கூடிய, தரமான சுகாதாரப் பராமரிப்பை உறுதி செய்வதற்கான அரசின் உறுதிப்பாட்டை முன்னெடுத்துச் செல்வதில் இந்தத் திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.
குழந்தையின் உயிர்வாழ்வு, வளர்ச்சி, ஊட்டச்சத்து, ஆரம்பகால மூளை வளர்ச்சி ஆகியவற்றுக்கு வாழ்க்கையின் முதல் மூன்று ஆண்டுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதை அங்கீகரித்து, முதல் மூன்று ஆண்டுகளுக்கு முழுமையான பராமரிப்பு என்ற தொலைநோக்குப் பார்வையை இத்திட்டம் முன்னெடுத்துச் செல்லும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278645®=3&lang=1
****
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2278664)
आगंतुक पटल : 14