பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய கடலோரக் காவல்படை கப்பலான அக்ஷய், படையில் இணைக்கப்பட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 27 JUN 2026 8:23PM by PIB Chennai

2026 ஜூன் 27 அன்று கோவாவில் உள்ள கோவா ஷிப்யார்ட் லிமிடெட்டில், புதிய தலைமுறை அதிவேக ரோந்துக் கப்பலான ஐசிஜிஎஸ் அக்ஷயை படையில் இணைத்ததன் மூலம், இந்திய கடலோரக் காவல்படை, தனது படையின் நவீனமயமாக்கலில் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்த அதிவேக ரோந்துக் கப்பல், நாட்டின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதில் இந்திய கடலோரக் காவல்படையின் நீடித்த மனப்பான்மை, மீள்திறன் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பறைசாற்றுகிறது. இந்தியாவின் பரந்த கடல்சார் களத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், பாதுகாப்பான, உறுதியான மற்றும் தூய்மையான கடல்களை உறுதி செய்வதற்கான சேவையின் தீர்மானத்தை இந்தக் கப்பல் வலுப்படுத்துகிறது.

கடல்சார் சட்ட அமலாக்கம், கடலோரப் பாதுகாப்பு, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை, கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆபத்தில் உள்ள மாலுமிகளுக்கு உதவுதல் உள்ளிட்ட பல்வேறு கடலோரக் காவல் சார்ந்த செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் இந்தக் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்திய கடலோரக் காவல்படையின் செயல்பாட்டுத் திறன் மேம்படுத்தப்படுகிறது.

நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையின் கூடுதல் செயலாளர் (பணியாளர் நலன்) திருமதி பரமா சென், கடலோரக் காவல்படை மேற்கு மண்டலத் தளபதி  பீஷம் சர்மா, துணை தலைமை இயக்குநர் (மனிதவள மேம்பாடு)  ஜோதிந்திர சிங் மற்றும் மத்திய, மாநில அரசுகளைச் சேர்ந்த பிற மூத்த பிரமுகர்கள் முன்னிலையில் இந்தக் கப்பல் படையில் சேர்க்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278486&reg=3&lang=1

***

TV/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2278637) வருகையாளர் எண்ணிக்கை : 43
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi