உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2026 சார் தாம் ஹெலிகாப்டர் செயல்பாடுகளின் முதல் கட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது

प्रविष्टि तिथि: 27 JUN 2026 8:14PM by PIB Chennai

2026 ஏப்ரலில் சார் தாம் யாத்திரை தொடங்கப்பட்டபோது, ஹெலிகாப்டர் சேவைகளின் முதல் கட்டம் துவங்கி, 2026 ஜூன் 26, அன்று நிறைவடைந்தது. இந்தக் காலகட்டத்தில், தினமும் சுமார் 400 ஹெலிகாப்டர் சேவைகள் மேற்கொள்ளப்பட்டன. மொத்தம் 12,032 சேவைகள், 67,064 யாத்ரீகர்களின் பயணத்திற்கு வழிவகுத்தன. அதே நேரத்தில், கூடுதலாக 2,065 தனியார் செயல்பாடுகள் 11,715 யாத்ரீகர்களுக்கு சேவை செய்து, சார் தாம் பகுதி முழுவதும் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் திறமையான இணைப்பை வழங்கின.

இந்த ஆண்டு செயல்பாடுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு, "பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், சார் தாம் யாத்திரையை மேற்கொள்ளும் ஒவ்வொரு பக்தரும் மிகுந்த எளிமையாகவும், வசதியாகவும், பாதுகாப்புடனும் பயணம் செய்வதை உறுதி செய்வதற்கு எங்கள் அரசு சிறப்பு முன்னுரிமை அளித்துள்ளது. ஒவ்வொரு யாத்ரீகரும் இந்தப் புனிதப் பயணத்தைப் பாதுகாப்பாகவும் முழு நம்பிக்கையுடனும் நிறைவு செய்வதை உறுதி செய்வதே எங்கள் முக்கிய கடமை" என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278482&reg=3&lang=1

****

TV/RB/RJ


(रिलीज़ आईडी: 2278530) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , English , Urdu , Marathi , हिन्दी , Telugu