திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் நடைபெற்ற திறன் மேம்பாட்டு விழாவில்,1,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள்

प्रविष्टि तिथि: 27 JUN 2026 7:31PM by PIB Chennai

தெலங்கானா மாநில அரசு, தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து, மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள கக்காட்டியா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவன வளாகத்தில் நடத்திய திறன் மேம்பாட்டு விழா – வாரங்கல் 2026' என்ற நிகழ்வில், அம்மாநிலம் முழுவதிலுமிருந்து வந்திருந்த 1,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான அழைப்புகள் கிடைத்துள்ளன. இந்நிகழ்ச்சியில், திறன்மிக்க இளைஞர்களைத் தொழில் நிறுவனங்களுடன் இணைக்கும் ஒரு தளமாக அமைந்தது. இதில் நேரடியான நேர்காணல்கள், ஆட்சேர்ப்பு, தொழிற்பழகுநர் பயிற்சி வாய்ப்புகள், தொழில் வழிகாட்டுதல் ஆகியவை இடம்பெற்றன.

இந்த நிகழ்விற்கு வாரங்கல், அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்தது. 4,500-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக பதிவு செய்தனர். மேலும், 2,200-க்கும் மேற்பட்டோர் நேரடி ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளில் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் 90-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடினர். இந்நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை வழங்கின.

நேரடி ஆள்சேர்ப்பு நடவடிக்கையின் போது உடனடியாகத் தேர்ந்தெடுக்கப்படாத விண்ணப்பதாரர்களின் விவரங்கள், பங்கேற்ற நிறுவனங்களின் பரிசீலனையில் இருக்கும். நிறுவனங்களின் ஆள்சேர்ப்பு நடைமுறையின் ஒரு பகுதியாக அவர்களது விண்ணப்பங்கள் மேலும் மதிப்பாய்வு செய்யப்படும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அடுத்தகட்டத் தேர்வுகளுக்காக நேரடியாகத் தொடர்பு கொள்ளப்படுவார்கள்.

நாள் முழுவதும் நடைபெற்ற இந்நிகழ்வில், உற்பத்தி, வாகனத் துறை, சரக்குப் போக்குவரத்து, ஜவுளி, சில்லறை வர்த்தகம், சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், அது சார்ந்த சேவைகள், தொலைத்தொடர்பு, சுற்றுலா,  விருந்தோம்பல், வங்கி, நிதிச் சேவைகள், காப்பீடு போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் நேர்காணல்களை நடத்தி, விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுத்து வேலைவாய்ப்புக்கான அழைப்புகளை வழங்கின. பள்ளிப் படிப்பு முடித்தவர்கள், தொழிற்படிப்பு, டிப்ளோமா முடித்தவர்கள், பட்டதாரிகள், திறன்மிக்க தொழில்துறை வல்லுநர்கள் எனப் பல்வேறு கல்விப் பின்னணியைக் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு இதுவொரு வாய்ப்பாக அமைந்தது. இது பல்வேறு தொழில்துறைகளில் திறன்மிக்க பணியாளர்களுக்கான தேவை அதிகரித்து வருவதை மீண்டும் உறுதிப்படுத்தியது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278467&reg=3&lang=1

****

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2278484) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी