சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
ஹரித்வாரில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி - மத்திய அமைச்சர் திரு வீரேந்திர குமார் தலைமை வகித்தார்
प्रविष्टि तिथि:
26 JUN 2026 3:30PM by PIB Chennai
2026 ஜூன் 17 முதல் 26 வரை அனுசரிக்கப்படும் போதைப் பொருள் இல்லாத இந்தியா உறுதி்மொழி நிகழ்வுகளின் ஒரு பகுதியாக பதிவு இயக்கங்கள், கருத்தரங்குகள், இணையவழிக் கருத்தரங்குகள், குழந்தைகள் - இளைஞர்களுக்கான பயிற்சி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தெரு நாடகங்கள், சிறு நாடகங்கள், முழக்கம் எழுதும் போட்டிகள், மின் உறுதிமொழிகள், பேரணிகள், யோகா அமர்வுகள், கையெழுத்து இயக்கங்கள், கட்டுரை எழுதும் போட்டிகள், ஓவியப் போட்டிகள், பல சமூக ஈடுபாட்டு முயற்சிகள் உள்ளிட்ட தொடர்ச்சியான சமூக விழிப்புணர்வு செயல்பாடுகள் நடைபெற்றன. இதில் 1.31 கோடிக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர்.
போதைப்பொருள் பயன்பாடு, சட்டவிரோத கடத்தல் ஆகியவற்றுக்கு எதிரான சர்வதேச தினத்தை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த தொடர் உறுதிமொழி நிகழ்வு, இன்று (2026 ஜூன் 26) உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள தேவ் சம்ஸ்கிருதி விஸ்வவித்யாலயத்தில் நடைபெற்ற தேசிய விழிப்புணர்வு நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு, மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தலைமை வகித்தார். தேவ் சம்ஸ்கிருதி விஸ்வவித்யாலயத்தின் துணைத் துணைவேந்தர் டாக்டர் சின்மய் பாண்டியா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, டாக்டர் வீரேந்திர குமார் தலைமையில், சுமார் 4,000 பேர் பங்கேற்புடன் போதை இல்லாத இந்தியா என்ற பேரணி நடைபெற்றது. இது, போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான தேசிய இயக்கத்திற்கு பரவலான மக்கள் ஆதரவை வெளிப்படுத்தியது. இந்நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழி அமைச்சர் தலைமையில் ஏற்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மாணவர்கள், இளைஞர்கள், பல்வேறு ஆன்மீக அமைப்புகளின் தன்னார்வலர்கள், உத்தராகண்ட் அரசுப் பிரதிநிதிகள் என ஆயிரக்கணக்கானோர் இணையவழியாகவும் நேரடியாகவும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278199®=3&lang=1
(Release ID: 2278199)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2278235)
आगंतुक पटल : 12