பிரதமர் அலுவலகம்
பங்கிம் சந்திர சட்டர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்
प्रविष्टि तिथि:
26 JUN 2026 12:50PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, பங்கிம் சந்திர சட்டர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். தலைமுறை தலைமுறையாக இந்தியர்களிடையே தேசபக்தியையும் கலாச்சாரப் பெருமித உணர்வையும் தூண்டிய ஒரு மாபெரும் இலக்கிய மேதை என அவரைப் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்.
இந்த ஆண்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ள திரு நரேந்திர மோடி, வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழாவை இந்தியா கொண்டாடுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். வந்தே மாதரம் மூலம், பங்கிம் சந்திர சட்டர்ஜி இந்திய சுதந்திர போராட்டத்திற்கும் நாட்டிற்கும் உதவேகம் அளித்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"பங்கிம் சந்திர சட்டர்ஜியின் பிறந்தநாளன்று அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.
மாபெரும் இலக்கிய மேதையான அவரது எழுத்துக்கள், தலைமுறை தலைமுறையாக இந்தியர்களிடையே தேசபக்தியையும் பண்பாட்டுப் பெருமித உணர்வையும் தட்டி எழுப்பின. அவரது செழுமையான இலக்கியப் படைப்புகள், தொடர்ந்து மனங்களை ஒளிரச் செய்து, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான நமது கூட்டுறுதியை வலுப்படுத்துகின்றன.
வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழாவை நாம் கொண்டாடும் தருணம் இது. வந்தே மாதரம் வழியாக, அவர் சுதந்திர போராட்டத்திற்கும் நமது தேசத்திற்கும் உத்வேகம் அளித்தார்."
(Release ID: 2278128)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2278184)
आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam