கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
மும்பை துறைமுக ஆணையத்தின் மேம்பாட்டுக்கு ரூ. 5,028 கோடி மதிப்பிலான திட்டங்கள்: மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால்
இடுகை இடப்பட்ட நாள்:
25 JUN 2026 11:13PM by PIB Chennai
மும்பை துறைமுக ஆணையத்தின் 154-வது நிறுவன தின விழாவில் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் கலந்துகொண்டார். இந்தியாவின் பழமையான இத்துறைமுகத்தை நவீன, நீடித்த எதிர்கால கடல்சார் மையமாக மாற்றும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள ரூ. 5,028.17 கோடி மதிப்பிலான 63 திட்டங்களை அவர் சுட்டிக்காட்டினார். இதில் உட்கட்டமைப்பு, கடல்சார் வளர்ச்சிக்கான முக்கியத் திட்டங்களும் அடங்கும்.
வளர்ச்சி அடைந்த இந்தியா 2047 இலக்கை நோக்கி நாடு முன்னேறி வரும் வேளையில், பிரதமரின் தொலைநோக்கு பார்வையின் கீழ் நமது துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் மையமாக மாறி வருவதாக அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதுடன், கப்பல் போக்குவரத்து, கப்பல் சுற்றுலாவுக்கான புதிய வாய்ப்புகளை திறப்பது தங்களின் முக்கிய நோக்கம் என்றார்.
விழாவின் ஒரு பகுதியாக, இந்திரா டாக் செயல்பாடுகள், பராமரிப்பு ஒப்பந்தம், மும்பை மரினா ஒப்பந்தம் ஆகிய இரு முக்கிய உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் திரு சாந்தனு தாக்கூர், கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுகங்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு விஜய் குமார் உட்படப் பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277852®=3&lang=1
***
TV/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2278116)
வருகையாளர் எண்ணிக்கை : 48