நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

36-வது தேசிய இளையோர் நாடாளுமன்றப் போட்டி: தென் மண்டல அளவில் மதுரை பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி முதலிடம்

प्रविष्टि तिथि: 25 JUN 2026 8:05PM by PIB Chennai

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கிடையேயான 36-வது தேசிய இளையோர் நாடாளுமன்றப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா புதுதில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்குத் தலைமை தாங்கிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பள்ளிகளுக்கும் பரிசுகளை வழங்கினார்.

ஜனநாயக விழுமியங்களையும் நாடாளுமன்ற நெறிமுறைகளையும் இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையில் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். இப்போட்டியில் புதுதில்லி குடியரசுத் தலைவர் எஸ்டேட்டில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயா பள்ளி தேசிய அளவில் முதலிடம் பிடித்தது. சென்னை மண்டலத்தைச் சேர்ந்த மதுரை பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி தென் மண்டல அளவில் வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளது.

இந்நிகழ்வில், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக, இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278002&reg=3&lang=1

****

TV/PD/SH


(रिलीज़ आईडी: 2278064) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी