கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
மும்பை துறைமுக ஆணையத்தின் 154-வது நிறுவன நாள் விழா: மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் பங்கேற்பு
प्रविष्टि तिथि:
25 JUN 2026 5:13PM by PIB Chennai
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் உள்ள மும்பை துறைமுக ஆணையத்தின் 154-வது நிறுவன நாள் விழா மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், மத்திய இணையமைச்சர் திரு சாந்தனு தாக்கூர் முன்னிலையில் இன்று கொண்டாடப்பட்டது.
விழாவில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், மும்பை ஒரு சாதாரணத் துறைமுக நகரம் என்ற நிலையிலிருந்து நாட்டின் நிதி, வணிகத் தலைநகரமாக வளர்ந்ததில் இத்துறைமுகம் வகித்த முக்கிய பங்கிற்கு பாராட்டு தெரிவித்தார். இந்தியாவின் கடல்சார் பயணத்தில் மும்பை துறைமுகம் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளதுடன் முதலீடு, சுற்றுலா, எரிசக்திப் பாதுகாப்பிற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது என அவர் குறிப்பிட்டார். 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் இத்தகைய நிறுவனங்களுக்கு முக்கியப் பொறுப்பு உள்ளது என மத்திய இணையமைச்சர் திரு சாந்தனு தாக்கூர் தெரிவித்தார்.
இந்நிறுவன நாள் விழாவின் ஒரு பகுதியாக, மும்பை துறைமுக ஆணையம் ₹5,028.17 கோடி மதிப்பில் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளவுள்ள 63 திட்டங்களையும் வெளியிட்டது. இந்த விழாவில் துறைமுகத்தின் வரலாற்றுப் பயணமும் கடல்சார் பங்களிப்பை விளக்கும் காணொளி காட்சிப்படுத்தப்பட்டது. மேலும், இந்த விழாவில் இந்திரா டாக் ஒப்பந்தம், மும்பை மெரினா ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277840®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2278010)
आगंतुक पटल : 11