புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசின் உட்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்த அறிக்கை

प्रविष्टि तिथि: 25 JUN 2026 4:00PM by PIB Chennai

மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் நாட்டைக் கட்டமைப்பதற்கான செயல்திட்டப் பணிகள் குறித்த மதிப்பீடு, கண்காணிப்பு, பகுப்பாய்வு தளத்தின் மூலம் மத்திய அரசின் துறை சார்ந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டப் பணிகளின்  கண்காணிப்பைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இது பல்வேறு அமைச்சகங்களுக்கிடையேயான திட்டங்களைக் கண்காணித்தல், குறித்த நேரத்தில் மறுஆய்வு செய்தல், தரவு சார்ந்த முடிவுகளை எடுத்தல் ஆகிய நடைமுறைகளை மேம்படுத்துகிறது. மே 2026 நிலவரப்படி, ரூ. 42.50 லட்சம் கோடி மதிப்பிலான 1,987 உள்கட்டமைப்புத் திட்டப் பணிகளை இந்த பிரத்யேக இணையதளம் கண்காணிக்கிறது.

இதன் முக்கிய அம்சங்கள்

மே 2026 நிலவரப்படி, 17 மத்திய அமைச்சகங்கள்/துறைகளின் கீழ், மொத்தம் ரூ. 42.50 லட்சம் கோடி திருத்தப்பட்ட மதிப்பீடு கொண்ட 1,987 உள்கட்டமைப்புத் திட்டங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களுக்காக இதுவரை செலவிடப்பட்ட மொத்தத் தொகை ரூ 21.82 லட்சம் கோடியாகும். இது திட்டத்தின் திருத்தப்பட்ட மொத்தச் செலவில் 51.34 சதவீதமாகும். இது திட்ட அமலாக்கத்தில், சீரான முன்னேற்றம் இருப்பதை எடுத்துக் காட்டுகிறது.

குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான திட்டங்கள் மேம்பட்ட நிலையில் உள்ளன. இதில் 817 திட்டங்கள் (41%) 80%-க்கும் அதிகமான முன்னேற்றத்தையும், 280 திட்டங்கள் (14%) 80%-க்கும் அதிகமான நிதிசார் நிறைவு நிலையையும் எட்டியுள்ளன. இத்தரவுகள், திட்டங்கள் தொடக்க நிலையிலான மேம்பட்ட அமலாக்க நிலைகளில் பரவலாக அமைந்துள்ளதை எடுத்துக் காட்டுவதுடன், ஒரு சமச்சீரான திட்ட வரிசையையும் பிரதிபலிக்கின்றன.

மத்திய போக்குவரத்து, தளவாடத் துறையின் ஒருங்கிணைந்த முதன்மைப் பட்டியலின் அடிப்படையில், அதிக எண்ணிக்கையிலான (1,476) செயல்பாட்டிலுள்ள திட்டங்களைக் கொண்டுள்ளது. இதன் திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ 23.50 லட்சம் கோடியாகும். இது போக்குவரத்து இணைப்பு வசதியை மையமாகக் கொண்ட உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு அளிக்கப்படும் முன்னுரிமையை சுட்டிக் காட்டுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277758&reg=3&lang=1

(Release ID:2277758)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2278005) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , Gujarati , English , Urdu