ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

8-வது தூய்மை குடிநீர் கிராம நிகழ்ச்சி: நீடித்த குடிநீர் பாதுகாப்பிற்கு பஞ்சாயத்துகளை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

प्रविष्टि तिथि: 25 JUN 2026 5:10PM by PIB Chennai

மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீர், துப்புரவுத் துறை சார்பில் ஜல் ஜீவன் இயக்கம் 2.0-ன் கீழ், சமூக அடிப்படையிலான தண்ணீர் நிர்வாகத்தை வலுப்படுத்தும் நோக்கில் 8-வது 'சுஜல் கிராம் சம்வாத்' எனப்படும் தூய்மை குடிநீர் கிராமம் இயக்கத்தின் இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தேசிய ஜல் ஜீவன் இயக்கத்தின் கூடுதல் செயலாளர் திரு கமல் கிஷோர் சோன் தலைமை தாங்கிய இக்கூட்டத்தில் 3,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கிராமப்புற வீடுகளுக்கு குழாய் மூலம் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதில் கிராம ஊராட்சிகளின் பங்களிப்பை திரு கமல் கிஷோர் சோன் விவரித்தார். 16-வது நிதிக்குழுவின் கீழ் நிதி பெற, கிராம ஊராட்சிகள் அளவிலான வளர்ச்சித் திட்டங்களை இவ்வாண்டு ஆகஸ்ட் 15-க்குள் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார். அஸ்ஸாம், கர்நாடகா, ஹரியானா, திரிபுரா மாநிலங்கள், லடாக் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த ஊராட்சிப் பிரதிநிதிகள் தங்களின் பிராந்திய மொழிகளில் குடிநீர் விநியோகம் தொடர்பான வெற்றிக் கதைகளையும், களத்தில் எதிர்கொள்ளும் சவால்களையும் பகிர்ந்துகொண்டனர். குடிநீர் ஆதாரங்களின் நிலைத்தன்மை, தூய்மை, தரக்கட்டுப்பாட்டு கண்காணிப்பை உறுதி செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு இந்நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277834&reg=3&lang=1

****

TV/PD/SH


(रिलीज़ आईडी: 2277967) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Kannada