ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சரக்கு ரயில் பெட்டி வடிவமைப்பு கொள்கையில் முக்கிய சீர்திருத்தங்கள்: ரயில்வே வாரியம் முடிவு

प्रविष्टि तिथि: 25 JUN 2026 4:03PM by PIB Chennai

ரயில்வே சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில்சரக்கு ரயில் பெட்டி வடிவமைப்பு கொள்கையில் முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள மத்திய ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. புதிய சரக்கு ரயில் பெட்டி வடிவமைப்பு கொள்கையை 15 நாட்களுக்குள் வெளியிடுமாறு மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மத்திய ரயில்வே அதிகாரிகள்இணையமைச்சர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. புதிய கொள்கையின் கீழ்பல்வேறு தொழில்துறையினர் தங்களின் வணிகத் தேவைக்கேற்ப பிரத்யேக சரக்கு ரயில் பெட்டிகளை வடிவமைக்க அனுமதிக்கப்படுவர். சிமெண்ட்உப்புஎஃகு போன்ற குறிப்பிட்ட பொருட்களின் கையாளுதல்ஏற்றுதல்இறக்குதல் தேவைகளுக்கு ஏற்ப புதிய சரக்கு ரயில் பெட்டிகளை உருவாக்க இது வழிவகுக்கும்.

வடிவமைப்பு ஒப்புதல்முன்மாதிரி மேம்பாட்டிற்கான கடுமையான தரநிலைகள் மூலம் உயர் தரமான சரக்குப்பெட்டிகள் தயாரிப்பது உறுதி செய்யப்படும். சாலைப் போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்து சுமார் 90 சதவீதம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. இந்த சீர்திருத்தம் தூய்மையான போக்குவரத்துதற்சார்புபுதிய முதலீடுகளை ஈர்ப்பதுடன்வேலைவாய்ப்புகளை உருவாக்கி 'வளர்ச்சியடைந்த இந்தியாஎன்ற தொலைநோக்கு பார்வையை வலுப்படுத்தும் என்று அமைச்சர் கூறினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277771&reg=3&lang=1  

***

SS/PD/SH


(रिलीज़ आईडी: 2277959) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Kannada , Malayalam