சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மூத்த குடிமக்களுக்கான ஷதாயு டிஜிட்டல் தள சேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன

प्रविष्टि तिथि: 25 JUN 2026 3:32PM by PIB Chennai

மத்திய சமூக நீதிஅதிகாரமளித்தல் அமைச்சகத்தின் தன்னாட்சி அமைப்பான தேசிய சமூகப் பாதுகாப்பு நிறுவனம் முதியோர்களின் நலனுக்காகச் தாயு எனப்படும் புதிய டிஜிட்டல் தளத்தை கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கியது. சிறப்புப் பயிற்சி பெற்ற முதியோர் பராமரிப்பாளர்களைத் தேவையுள்ள மூத்த குடிமக்களுடன் நேரடியாக இணைக்கும் ஒரு பாலமாக இந்தத் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் பயிற்சி முடித்த தகுதியான பராமரிப்பாளர்களும் இதில் தங்களை சுயமாகவே பதிவுசெய்து கொள்ளும் சிறப்பு வசதி தற்பொழுது ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக நாடு முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான மூத்த குடிமக்கள் தங்களுக்குத் தேவையான உயர்தரப் பராமரிப்புச் சேவைகளை எவ்வித சிரமமுமின்றி மிக எளிதாகப் பெற முடியும்.

தொடக்கக் காலத்தில் இந்தத் தளத்தில் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள ஒருசில சிறிய தொழில்நுட்பக் குறைபாடுகளை தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்துச் சரிசெய்து வருகின்றது. எனவேபல்வேறு சமூக ஊடகப் பக்கங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களையும்வதந்திகளையும் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மூத்த குடிமக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதி செய்வதிலும்அவர்களுக்கான உள்ளடக்கியவயதுக்கேற்ற பாதுகாப்பான சூழலை உருவாக்குவதிலும் மத்திய அரசு தொடர்ந்து முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277755&reg=3&lang=1  

***

SS/PD/SH


(रिलीज़ आईडी: 2277949) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu