கூட்டுறவு அமைச்சகம்
கூட்டுறவு வங்கிகள் நவீன தொழில்நுட்பத் தளங்களை பயன்படுத்துவது அவசியம்: மத்திய கூட்டுறவுத்துறை செயலாளர்
प्रविष्टि तिथि:
25 JUN 2026 5:17PM by PIB Chennai
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ‘கூட்டுறவின் மூலம் வளம் - தொலைநோக்கு பார்வையிலிருந்து கள யதார்த்தம் வரை’ என்ற கருப்பொருளில் 8-வது தேசிய மாநாடு நடைபெற்றது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில், மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின்படி இம்மாநாடு நடத்தப்பட்டது.
மாநாட்டில் உரையாற்றிய மத்திய கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் ஆஷிஷ் குமார் பூடானி, கூட்டுறவு அமைப்புகள் வெறும் எண்களாக இல்லாமல் தரம், பொறுப்புக்கூறல், தொழில்முறை மேலாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என்றார். யுபிஐ, டிஜிட்டல் நிதிச் சேவைகள் காலத்தில் கூட்டுறவு வங்கிகள் நவீன தொழில்நுட்ப தளங்களை பயன்படுத்துவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
தேசிய கூட்டுறவு தரவுத்தளம் 2.0 மூலம் தரவு சார்ந்த நிர்வாகம் வலுப்படும். உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தின் கீழ் மாநிலங்கள் உட்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். பஞ்சாயத்துகளில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், பால் வளம், மீன்வளக் கூட்டுறவு சங்கங்களை அமைப்பதை விரைவுபடுத்துமாறும், கணினிமயமாக்கல் மூலம் வணிகத்தை பெருக்குமாறும் மாநிலங்களை அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277844®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2277942)
आगंतुक पटल : 6