எரிசக்தி அமைச்சகம்
11-வது பிரிக்ஸ் எரிசக்தித் துறை அமைச்சர்கள் கூட்டம் குருகிராமில் நடைபெற்றது
प्रविष्टि तिथि:
25 JUN 2026 3:19PM by PIB Chennai
இந்தியாவின் தலைமையில் 11-வது பிரிக்ஸ் எரிசக்தித்துறை அமைச்சர்கள் கூட்டம் ஹரியானா மாநிலம் குருகிராமில் நடைபெற்றது. மீள்திறன், புதுமை, பரஸ்பர ஒத்துழைப்பு, நிலைத்தன்மை ஆகிய முக்கியக் கொள்கைகளின் அடிப்படையில் இம்மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டது. மத்திய மின்துறை அமைச்சர் திரு மனோகர் லால் தலைமை வகித்த இக்கூட்டத்தில் உலகளாவிய எரிசக்தி சவால்கள், புதிய வாய்ப்புகள் குறித்து விரிவாக விவாதிப்பதற்கும், இத்துறையில் நடைமுறையில் உள்ள கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் எரிசக்தித் துறை அமைச்சர்கள், உயர்மட்ட அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர். அனைத்து நாடுகளின் தனித்துவமான உள்நாட்டுச் சூழ்நிலைகள், வளர்ச்சி முன்னுரிமைகள், எரிசக்தித் துறை வளர்ச்சிப் பாதைக்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு அமைச்சர்கள் உறுதியளித்தனர்.
பிரிக்ஸ் நாடுகளின் ஒருமித்த கொள்கை முடிவுகளைப் பிரதிபலிக்கும் 11-வது பிரிக்ஸ் எரிசக்தித் துறை அமைச்சர்களின் கூட்டு அறிக்கை பிரகடனம் இக்கூட்டத்தின் நிறைவாக ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்தியாவின் தலைமையின் முக்கிய பலன், பிரிக்ஸ் ஆற்றல் ஆராய்ச்சி ஒத்துழைப்பு தளத்தின் கீழ், ஸ்மார்ட் கிரிடுகள், ஆற்றல் சேமிப்பிற்கான பிரிக்ஸ் டிஜிட்டல் மேம்பாட்டு மையம் (https://brics-dcoe.global/) தொடங்கப்பட்டதாகும்.
எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, இத்துறையின் கூட்டு ஆராய்ச்சிப் பணிகள், இளைஞர்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பைத் தொடர்ந்து ஊக்குவிப்பதன் அவசியத்தை அனைத்துப் பிரதிநிதிகளும் ஒருமனதாக வலியுறுத்தினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277751®=3&lang=1
***
SS/PD/RJ
(रिलीज़ आईडी: 2277934)
आगंतुक पटल : 7