சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மருத்துவ நிறுவனங்கள் சட்டத்தில் சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய சுகாதார அமைச்சகம் அறிமுகப்படுத்துகிறது
प्रविष्टि तिथि:
25 JUN 2026 1:21PM by PIB Chennai
மருத்துவ நிறுவனங்கள் (பதிவு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 2010-க்கான திருத்தங்களை மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. 2026 ஏப்ரல் 8 அன்று மத்திய அரசின் அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட, ஜன் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தச்) சட்டத்தையடுத்து, 2026 ஜூன் 22 அன்று இதனை அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் நோயாளிகளின் பாதுகாப்பு, சுகாதார சேவைகளின் தரத்தை உறுதி செய்யும் வகையிலும், நம்பிக்கை சார்ந்த நிர்வாக நடைமுறைகளை ஊக்குவிக்கவும், விதிமுறைகளுக்கான இணக்க நடைமுறை சார்ந்த சுமையைக் குறைக்கும் வகையிலும், தொழில் தொடங்குவதை எளிதாக்குதல், விகிதாச்சார அடிப்படையிலான ஒழுங்குமுறை அமலாக்கத்தை உறுதி செய்தல் ஆகியவை இந்த சீர்திருத்த நடவடிக்கைகளின் முக்கிய நோக்கங்களாகும்.
ஜன் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தச்) சட்டம், 2026', 23 அமைச்சகங்கள், துறைகளால் நிர்வகிக்கப்படும் 79 மத்திய சட்டங்களின் விதிமுறைகளைச் சீரமைக்கிறது. மத்திய சுகாதாரத் துறையில், சிறிய நடைமுறை சார்ந்த விதிமீறல்களைக் குற்றச் செயல்களாகக் கருதாத வகையிலும், குடிமக்கள் சார்ந்த ஒழுங்குமுறை நடைமுறைகளை வலுப்படுத்தும் வகையிலும், சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள ஐந்து சட்டங்களில், 35 விதிமுறைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. 'மருத்துவ நிறுவனங்கள் சட்டம், 2010'-ன் கீழ் அறிவிக்கப்பட்ட இந்தத் திருத்தங்கள், பொறுப்புணர்வு கொண்டதாகவும், இணக்க நடைமுறை விதிகளை எளிதாக்கும் வகையிலும் ஒழுங்குமுறைச் சூழலை உருவாக்கும் விரிவான சீர்திருத்த முயற்சியின் ஒரு அங்கமாகும்.
திருத்தியமைக்கப்பட்ட கட்டமைப்பின் கீழ், இச்சட்டத்தின் 40, 43, 46-வது பிரிவுகளில் அபராதம் என்ற சொல் தண்டணைத் தொகை என்று மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அமலாக்க நடைமுறைகளுக்கான கட்டமைப்பு, குற்றவியல் வழக்கு நடவடிக்கையிலிருந்து, நிர்வாக ரீதியான தீர்வு காணும் நடைமுறைக்கு மாற்றப்பட்டுள்ளது. மருத்துவ நிறுவனங்களின் விதிமீறல்களுக்குப் படிப்படியான, விகிதாச்சார அடிப்படையிலான அபராதங்களை அறிமுகப்படுத்தும் வகையில், 44-வது பிரிவு திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இது விதிமீறலின் தன்மை, தீவிரத்திற்கு ஏற்ப அமலாக்க நடவடிக்கை அமைவதை உறுதி செய்கிறது. மேலும், 41-வது பிரிவின் கீழ் உள்ள தீர்வு காணும் அதிகார அமைப்பின் செயல்பாடு வலுப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன் அதிகார வரம்பு 40, 43, 44-வது பிரிவுகளின் கீழ் வரும் நடவடிக்கைகளையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது வெளிப்படையான, திறமையான, பொறுப்புணர்வுடன் கூடிய அமலாக்க நடவடிக்கைகளை எளிதாக்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277693®=3&lang=1
***
SS/SV/RJ
(रिलीज़ आईडी: 2277910)
आगंतुक पटल : 5