தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேம்பட்ட தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களுக்காக சி-டாட் மற்றும் ஐஐடி ஹைதராபாத் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

प्रविष्टि तिथि: 24 JUN 2026 7:59PM by PIB Chennai

மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் கீழ் இயங்கும் சி-டாட்  நிறுவனம், ஐஐடி ஹைதராபாத்துடன் இணைந்து புதிய 'சிறப்பு மையத்தை' நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தை மேம்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

 

ஐஐடி கான்பூர், காந்திநகர் மற்றும் ரூர்க்கிக்குப் பிறகு, சி-டாட் அமைக்கும் நான்காவது சிறப்பு மையம் இதுவாகும். இந்த மையம் 5ஜி/6ஜி தொழில்நுட்பங்கள், குவாண்டம் தகவல் தொடர்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு  சார்ந்த பயன்பாடுகளில் கூட்டு ஆராய்ச்சி மற்றும் முன்மாதிரி உருவாக்கத்தில் கவனம் செலுத்தும். இந்தத் திட்டம், மாணவர்களுக்கும் புத் தொழில் நிறுவனங்களுக்கும்  இந்தியாவைத் தொழில்நுட்ப ரீதியாகத் தற்சார்பு கொண்ட நாடாக மாற்ற உதவும். இந்த ஒத்துழைப்பு, இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையை உலகளாவிய அளவில் வலுவான மற்றும் முன்னணி நிலையில் நிலைநிறுத்த வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277553&reg=3&lang=1

செய்தி அடையான எண்:2277553

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2277606) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu