வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் வேளாண் ஏற்றுமதிக்கு வலுசேர்க்கும் ‘பாரதி’ திட்டம்: முதல் தொகுதி வெற்றி!

प्रविष्टि तिथि: 24 JUN 2026 7:44PM by PIB Chennai

மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் , வேளாண் ஏற்றுமதியில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க 'பாரதி'  எனும் முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

 

இதன் முதல் தொகுதியில், நாடு முழுவதும் உள்ள 22 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 100 புத்தொழில் நிறுவனங்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டு, 120 மணிநேர ஏற்றுமதி சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டது.

 

இத்திட்டத்தின் மூலம், உலகளாவிய சந்தை வாய்ப்புகள், வணிக வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப உதவி பெற்று, பல நிறுவனங்கள் வியத்தகு முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. குறிப்பாக, துபாய், நியூசிலாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு மாம்பழங்கள், சிறுதானிய உணவுகள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் புவிசார் குறியீடு பெற்ற  விளைபொருட்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளன. 2030க்குள் 50 பில்லியன் அமெரிக்க டாலர் வேளாண் ஏற்றுமதி இலக்கை அடைய இத்திட்டம் பெரும் உதவியாக அமையும் என உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277546&reg=3&lang=1

 

செய்தி அடையான எண்:2277546

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2277592) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Kannada