ஜவுளித்துறை அமைச்சகம்
ஜவுளித்துறை உச்சி மாநாடு 2026: சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, ஏற்றுமதி, உலகளாவிய சந்தை விரிவாக்கத்தில் கவனம் செலுத்தியது
प्रविष्टि तिथि:
24 JUN 2026 7:08PM by PIB Chennai
மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் ஜூன் 23 & 24 ஆகிய இரண்டு நாட்கள் நடத்திய ஜவுளித்துறை உச்சி மாநாடு 2026 இன்று நிறைவடைந்தது. மாநில அரசுகள், தொழில்துறை, கல்வித்துறையின் பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மாநாட்டில், ஜவுளித்துறையின் வளர்ச்சி எதிர்கால வழிகாட்டுதல்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மாநாட்டின் நிறைவில் பேசிய மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங், மாவட்ட மற்றும் மாநில அளவிலான திட்டங்களைச் துரிதமாகச் செயல்படுத்த வேண்டிய தருணம் இது என்று குறிப்பிட்டார். சுற்றுச்சூழல் தரநிலைகளைப் பின்பற்றுதல், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்துதல், குறிப்பிட்ட சந்தை தயாரிப்புகளில் கவனம் செலுத்துதல் ஆகியவற்றின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
மத்திய ஜவுளித்துறைச் செயலாளர் திருமதி நீலம் ஷாமி ராவ் பேசுகையில், மாநிலங்கள், தொழில்துறையினர் அளித்த பரிந்துரைகளை ஒருங்கிணைத்து ஒரு விரிவான தேசிய ஜவுளி ஏற்றுமதி வழிகாட்டி வரைபடம் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். தரம், புத்தாக்கம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் உலகளாவிய ஜவுளி வர்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரிக்கப்படும் என்று அவர் கூறினார். 2030-ம் ஆண்டிற்குள் ஜவுளி ஏற்றுமதியில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற இலக்கை எட்டவும், தாராள வர்த்தக ஒப்பந்தங்களின் பலன்களை ஏற்றுமதியாளர்கள் முழுமையாகப் பயன்படுத்தவும் இந்த மாநாடு புதிய வழிகளை வகுத்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277529®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2277569)
आगंतुक पटल : 9