ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திரிபுரா மாநிலத்தில் ரூ. 211.71 கோடி மதிப்பிலான சாலைப் பணிகளுக்கு மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது

प्रविष्टि तिथि: 24 JUN 2026 4:33PM by PIB Chennai

பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டத்தின் (நான்காம் கட்டம்) கீழ் திரிபுரா மாநிலத்தில் 163.872 கி.மீ நீளமுள்ள 96 சாலைப் பணிகளுக்கு 2026-27 நிதியாண்டின் முதல் தொகுப்பாக ரூ. 211.71 கோடி வழங்க மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.  

இந்த அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் மூலம் அம்மாநிலத்தில் உள்ள 96 குடியிருப்புகளுக்கு முதல்முறையாக தடையற்ற சாலை இணைப்பு வசதி கிடைக்கும். இந்த மேம்பட்ட போக்குவரத்து வசதி பள்ளிகள், மருத்துவமனைகள், கிராமப்புறச் சந்தைகள் போன்ற அத்தியாவசியச் சேவைகளை மக்கள் எளிதில் அணுக வழிவகை செய்யும். இது அப்பகுதி மக்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகுப்பதுடன், மத்திய அரசின் வளர்ச்சியடைந்த இந்தியா தொலைநோக்குப் பார்வைக்கு முக்கியப் பங்களிப்பை வழங்கும்.

இத்திட்டத்தின் கீழ் திரிபுராவில் இதுவரை ரூ. 4,479 கோடி முதலீட்டில் 6,284 கி.மீ நீளமுள்ள 1,594 சாலைப் பணிகள், 66 பாலங்களுக்கு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277437&reg=3&lang=1

****

TV/PD/SH


(रिलीज़ आईडी: 2277545) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , हिन्दी , Bengali-TR