பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் 49-வது மாதாந்திர அறிக்கையை வெளியீடு

प्रविष्टि तिथि: 23 JUN 2026 6:47PM by PIB Chennai

நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை (DARPG), 2026 மே மாதத்திற்கான மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு  முறை (CPGRAMS) குறித்த 49-வது மாதாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை பொதுமக்கள் தெரிவித்துள்ள குறைகளின் வகைமைகள் பற்றிய பகுப்பாய்வையும், தீர்வு வழங்கப்பட்ட தன்மையையும் வழங்குகிறது.

இந்த அறிக்கையின்படி, 2026 மே மாதத்தில் மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் 1,78,423 குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன. 2026-ஆம் ஆண்டில் குறைகளைத் தீர்ப்பதற்கான சராசரி கால அளவு 13 நாட்களாக உள்ளது.

மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு  முறையின் வலைத்தளம் மூலம் 2026 மே மாதத்தில் பதிவு செய்துள்ள புதிய பயனர்கள் குறித்த தரவுகள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இதன்படி, பல்வேறு வழிகளில் மொத்தம் 65,174 புதிய பயனர்கள் பதிவு செய்துள்ளனர்.  இவர்களில் 11,365 பேர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். 2026 மே மாதத்தில் பின்னூட்ட அழைப்பு மையம் மூலம் 78,830 பின்னூட்டங்கள் பெறப்பட்டன. இவற்றில், 46,547 பின்னூட்டங்கள் மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தொடர்பானவை ஆகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277163&reg=3&lang=1

(Release ID: 2277163)

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2277301) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Kannada