இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவை உலகின் முதல் 10 விளையாட்டு நாடுகளில் ஒன்றாகவும், வரும் 2047-ம் ஆண்டிற்குள் முதல் 5 நாடுகளில் ஒன்றாகவும் மாற்றுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் மாண்டவியா
प्रविष्टि तिथि:
23 JUN 2026 6:02PM by PIB Chennai
ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் அனைவருக்குமான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என்ற முன்முயற்சியின் கீழ், 2026 ஐச்சி-நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான 'ஃபன் ரன்' ஓட்டத்தை இந்தியா முதன்முறையாக கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடத்தியது. இதில் 40,000-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டு வரலாறு படைத்தனர்.
அம்மாநில ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் திருமதி பி.டி. உஷா, கேரள விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சர் திரு. ஓ.ஜே. ஜனீஷ் குமார், பிற முக்கிய விருந்தினர்கள் முன்னிலையில், மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பல்கலைக்கழக மைதானத்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், இந்திய ஒலிம்பிக் சங்கம், கேரள ஒலிம்பிக் சங்கம், இந்நிகழ்வை ஏற்பாடு செய்வதில் ஈடுபட்ட அனைத்து தரப்பினருக்கும் பாராட்டுத் தெரிவித்தார்.
மாநிலத்தின் விளையாட்டு கலாச்சாரம், பொதுமக்களின் பங்கேற்பிற்குப் பாராட்டு தெரிவித்த அவர், இந்தியாவின் விளையாட்டு வரைபடத்தில் கேரளா மாநிலம் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது என்று கூறினார். விளையாட்டின் மீதான ஆர்வம் விளையாட்டு வீரர்களிடம் மட்டுமின்றி, மக்களிடமும் வெளிப்படுகிறது, என்று அவர் குறிப்பிட்டார்.
இம்மாநிலத்தில் விளையாட்டு வீரர் மேம்பாட்டுத் திட்டங்களின் தாக்கத்தை எடுத்துரைத்த அமைச்சர், தற்போது, 69 பெண் வீராங்கனைகள் உட்பட கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 115 விளையாட்டு வீரர்கள் 'கேலோ இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவின் எதிர்கால வெற்றியாளர்களாக உருவெடுப்பதற்கான பயிற்சி பெற்று வருகின்றனர் என்றார். மேலும், கேரளாவைச் சேர்ந்த 17 விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதை இலக்காகக் கொண்டுள்ள 'டாப்ஸ்' திட்டத்தின் கீழ், உலகத்தரம் வாய்ந்த பயிற்சியைப் பெற்று வருகின்றனர், என்று திரு மன்சுக் மாண்டவியா கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277128®=3&lang=1
(Release ID: 2277128)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2277237)
आगंतुक पटल : 8