பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மார்ஷல் ஆஃப் தி ஏர் ஃபோர்ஸ் அர்ஜன் சிங் நினைவு ஹாக்கிப் போட்டி, இன்று (23-ஜூன்-2026), தொடங்குகிறது

प्रविष्टि तिथि: 23 JUN 2026 2:44PM by PIB Chennai

மார்ஷல் ஆஃப் தி ஏர் ஃபோர்ஸ் அர்ஜன் சிங்கின் 107-வது பிறந்ததினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 'மார்ஷல் ஆஃப் தி ஏர் ஃபோர்ஸ் அர்ஜன் சிங் நினைவு ஹாக்கிப் போட்டி-2026'-ன் 7-வது பதிப்பு, ஜலஹள்ளி விமானப்படை நிலையத்தில், ஜூன் 23 முதல் ஜூலை 3, வரை நடைபெறவுள்ளது.

விமானப்படை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்படும்  இப்போட்டியில், மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.

இப்போட்டி, ஜலஹள்ளி விமானப்படை நிலையத்தின் ஹாக்கி மைதானத்தில் (ஜூன் 23, 2026) இன்று தொடங்கியது. விமானப்படை நிர்வாக அதிகாரி ஏர் மார்ஷல் எஸ். சிவகுமார் (விஎஸ்எம்) சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்தார்.

பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் இப்போட்டி தொடங்கியது.

இன்று நடைபெற்ற முதல் போட்டியில், இந்திய விமானப்படை அணி 2-0 என்ற கணக்கில், இந்திய ராணுவத்தின் பெங்களூரு தெற்குப் பிராந்திய அணியை வென்றது. இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக அக்னிவீர் விநாயக் சந்தோஷ் ஹாண்டே தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு, சிறப்பு விருந்தினர் ஏர் மார்ஷல் எஸ். சிவகுமார் ரூ. 25,000-க்கான காசோலையை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஏர் மார்ஷல் எஸ். சிவகுமார், "நாட்டின் மிகச்சிறந்த, மதிப்புமிக்க ஹாக்கிப் போட்டிகளில் ஒன்றான 'மார்ஷல் ஆஃப் தி ஏர் ஃபோர்ஸ் அர்ஜன் சிங் நினைவு ஹாக்கிப் போட்டி' மீண்டும் நடைபெறுவதில் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார். இப்போட்டி நாட்டின் முன்னணி ஹாக்கி அணிகளுக்கு, ஒரு சிறந்த களத்தை வழங்கும் என்று அவர் கூறினார். இப்போட்டியைச் சுமூகமாக நடத்துவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்திய விமானப்படை மேற்கொள்ளும்," என்று அவர் கூறினார்.

இந்த ஹாக்கிப் போட்டியை நடத்துவதன் மூலம், மார்ஷல் ஆஃப் தி ஏர் ஃபோர்ஸ் அர்ஜன் சிங், நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பிற்கு, நன்றி செலுத்தும் வகையிலும், இந்தச் சாதனையாளருக்கு இந்திய விமானப்படையின் பொருத்தமான, சிறப்பான மரியாதையாகவும்  அமைகிறது.

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276983&reg=3&lang=1

(Release ID: 2276983)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2277233) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu