மருந்துகள் துறை
மருத்துவ சாதனங்களுக்கான சர்வதேச ஒப்பந்தக் கோரல் விலக்கு பட்டியலில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்த கருத்துகளைத் தெரிவிக்கலாம் - மருந்துகள் துறை
प्रविष्टि तिथि:
23 JUN 2026 3:34PM by PIB Chennai
மருத்துவ சாதனங்களுக்கான சர்வதேச ஒப்பந்தக் கோரல் விலக்கு பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான முன்மொழிவுகள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து மருந்துகள் துறை கருத்துகளைக் கோரியுள்ளது. ஏற்கனவே உள்ள இந்தப் பட்டியல் குறித்த கருத்துகளைத் தெரிவிக்கக் கோரி கடந்த 11 பிப்ரவரி 2026 அன்று வெளியிடப்பட்டிருந்த பொது அறிவிப்பைத் தொடர்ந்து, அப்பட்டியலில் உள்ள விவரங்களைச் சேர்த்தல், நீக்குதல் அல்லது திருத்துதல் ஆகியவை தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
உள்நாட்டு உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், தொழில் சங்கங்கள், கொள்முதல் முகமைகள், சுகாதார நிறுவனங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும், தங்களது கருத்துகளையும், அதற்கான துணைத் தகவல்களையும், 2026, ஜூலை 15 அன்று அல்லது அதற்கு முன்னதாக மின்னஞ்சல் வாயிலாகச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தங்களது கருத்துக்களை usmedicaldevices@pharma-dept.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று மருந்துகள் துறை கேட்டுக் கொண்டுள்ளது. அதேவேளையில் so-medicaldevices@pharma-dept.gov.in என்ற இணையதள முகவரிக்கும் அதன் நகலை அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுக்கு https://pharma-dept.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
திருத்தங்களுக்கான முன்மொழிவுகளின் முழுமையான பட்டியலைக் காண, கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்:
https://acrobat.adobe.com/id/urn:aaid:sc:AP:af2bd2ba-945f-474a-9762-795547f0a09f
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276997®=3&lang=1
(Release ID:2276997)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2277229)
आगंतुक पटल : 8