பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

15-வது பாதுகாப்பு தகவல் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்கு பாதுகாப்பு இணையமைச்சர் தலைமை தாங்கினார்

प्रविष्टि तिथि: 23 JUN 2026 3:50PM by PIB Chennai

புதுதில்லியில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணியாளர் தலைமையகத்தில் 2026 ஜூன் 23 அன்று நடைபெற்ற 15-வது பாதுகாப்பு தகவல் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்கு பாதுகாப்பு இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்பத்தில் தற்சார்பு, உரிய நேரத்தில் நவீன தொழில்நுட்பத்தை அணுகல் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மாறிவரும் போர்முறையில் பாதுகாப்புப் படைகளில் புரட்சிகரமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்து துறைசார் நிபுணர்களால் முக்கிய கொள்கை முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேம்பட்ட சிப் உற்பத்தியை உள்நாட்டிலேயே தயாரிப்பதுதரவுத்தளத்தை உருவாக்குவதுபாதுகாப்புத் தேவைகளுக்காக தரவு மையங்களை உத்திசார் ரீதியாக அமைப்பது போன்ற பல தொடர்புடைய அம்சங்கள் குறித்து உறுப்பினர்கள் விவாதித்தனர். அரசின் வளர்ச்சியடைந் இந்தியா தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, பாதுகாப்புப் படைகளுக்கு மட்டுமின்றி, தேசிய தொழில்நுட்ப வளர்ச்சி செயல்முறைகளுக்கும் தொலைநோக்குப் பலன்களை அளிக்கக்கூடிய திட்டங்களுக்கு இக்குழு ஒப்புதல் அளித்தது.

இக்கூட்டத்தில் முப்படைகளின் அதிகாரிகள், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகள், கல்வி, தொழில்துறையைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277006&reg=3&lang=1

***

SS/IR/LDN/SH


(रिलीज़ आईडी: 2277180) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi