செயற்கை நுண்ணறிவால் திரைப்படத் தயாரிப்பை மேலும் எளிதாக மாற்ற முடியும்: பிரபல அனிமேஷன் பட தயாரிப்பாளர் திரு ஆனந்த் பாண்டே
19-வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் “செறிவான எதிர்கால சினிமாவை ஆராய்தல்” என்ற தலைப்பிலான பயிலரங்கம் நடைபெற்றது. இதில் பிரபல அனிமேஷன் பட தயாரிப்பாளர் திரு ஆனந்த் பாண்டே பேசுகையில், செயற்கை நுண்ணறிவால் திரைப்படத் தயாரிப்பை மேலும் எளிதாக மாற்ற முடியும் என்றார். ஆனால் அது திரைப்படத் தயாரிப்பு நிபுணர்களை முழுமையாக மாற்றாது என்று கூறினார்.
செயற்கை நுண்ணறிவால் இயங்கும் வீடியோ கருவிகள் எவ்வாறு மேலும் மேம்பட்டதாகவும் எளிதில் அணுகக்கூடியதாகவும் மாறி வருகின்றன என்பதை அவர் விளக்கினார்.
செயற்கை நுண்ணறிவும் பாரம்பரிய திரைப்படத் தயாரிப்பும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்று கூறினார். ஃபிலிம் கேமராக்களில் இருந்து டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாறியதோடு இதை ஒப்பிட்ட அவர், ஒவ்வொரு தொழில்நுட்ப மாற்றமும் வேலை செய்யும் முறையை மாற்றுவதோடு, புதிய வாய்ப்புகளையும் உருவாக்குகிறது என்றார். சினிமாவில் மனிதனின் படைப்பாற்றல் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275763®=3&lang=1
***
SS/PLM/KR
रिलीज़ आईडी:
2276972
| Visitor Counter:
5