தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
2026 ஜனவரி - மார்ச் காலாண்டிற்கான இந்தியத் தொலைத் தொடர்புச் சேவைகள் செயல்பாட்டு குறியீட்டு அறிக்கை
प्रविष्टि तिथि:
22 JUN 2026 6:39PM by PIB Chennai
2026 மார்ச் 31 உடன் முடிவடைந்த காலாண்டிற்கான இந்தியத் தொலைத் தொடர்புச் சேவைகள் செயல்பாட்டு குறியீட்டு அறிக்கையை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் இன்று வெளியிட்டுள்ளது. சேவை வழங்குநர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை, இந்தியாவில் தொலைத் தொடர்புச் சேவைகள் குறித்த விரிவான கண்ணோட்டத்தை முன்வைக்கிறது. அத்துடன், 2026 ஜனவரி 1 முதல் 2026 மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் தொலைத் தொடர்புச் சேவைகள் மற்றும் கேபிள் டிவி, டிடிஹெச் மற்றும் வானொலி ஒலிபரப்புச் சேவைகளின் முக்கிய அம்சங்கள் மற்றும் வளர்ச்சிக் கூறுகள் பற்றியும் இது எடுத்துரைக்கிறது.
இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள விரிவான தகவல்களை www.trai.gov.in என்ற இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இணையதளத்தில் http://www.trai.gov.in/release-publication/reports/performance-indicators-reports என்ற இணைப்பில் அணுகலாம் .
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276780®=3&lang=1
(Release ID: 2276780)
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2276868)
आगंतुक पटल : 6