சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் மூத்த குடிமக்கள் 1300 பேர் பங்கேற்றனர்

प्रविष्टि तिथि: 22 JUN 2026 3:42PM by PIB Chennai

ஆரோக்கியமான முதுமைக்காக யோகா என்ற கருப்பொருளுடன் மூத்த குடிமக்களை மையமாகக் கொண்டு, சிறப்பு நிகழ்ச்சிகளுடன் சர்வதேச யோகா தினம் 2026-ஐ மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் நடத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திரகுமார், ஒட்டுமொத்த ஆரோக்கியம், உடல்நலனை மேம்படுத்தும் அதேவேளையில், மதம், சாதி, கொள்கை ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு யோகா மக்களை ஒன்றிணைப்பதாக கூறியுள்ளார்.

தலைநகர் புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா நிகழ்ச்சியில், மூத்த குடிமக்கள் 1300 பேர் உற்சாகமாக பங்கேற்றதாக தெரிவித்துள்ளார். உடற்தகுதியை மேம்படுத்துவது, மனநலன், வயதானவர்களின் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் யோகாவின் பங்களிப்பு குறித்து இந்நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276603&reg=3&lang=1

***

SS/IR/LDN/SH


(रिलीज़ आईडी: 2276831) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Malayalam , Urdu , हिन्दी , Marathi