மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவு - அசாம் புத்தாக்கம், ஸ்டார்ட் அப் அறக்கட்டளை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
प्रविष्टि तिथि:
22 JUN 2026 3:57PM by PIB Chennai
மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் டிஜிட்டல் இந்தியா கழகத்தின் கீழ் உள்ள டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவு - அசாம் அரசின் புத்தாக்கம், தொழில் பாதுகாப்பு ஸ்டார்ட் அப் துறையின் அங்கமான அசாம் புத்தாக்கம், ஸ்டார்ட் அப் அறக்கட்டளை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அசாமில், புத்தாக்கத்தை வலுப்படுத்துதல், டிஜிட்டல் உள்ளடக்கம், ஆகியவற்றுக்காக மொழி தொழில்நுட்பத்தை ஊக்குவித்தல், செயற்கை நுண்ணறிவு தீர்வுகளை உருவாக்குதல், பிராந்திய மொழிகளில் நிர்வாகம் ஆகியவற்றில் ஒத்துழைப்பது இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
புதுமையான பன்மொழி செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டைக் கட்டமைக்க, புத்தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர், புதிய கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வி நிறுவனங்கள், பாஷினியின் பன்மொழி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வகையில், அசாமின் புத்தொழில் மற்றும் புத்தாக்க சூழல் அமைப்பை ஆற்றல்மிக்கதாக மாற்றுவதில் இது முக்கிய கவனம் செலுத்தும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276627®=3&lang=1
***
SS/SMB/KPG/SH
(रिलीज़ आईडी: 2276826)
आगंतुक पटल : 5