தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தொழிலாளர் வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான சிறப்பு இயக்கம்
प्रविष्टि तिथि:
22 JUN 2026 2:38PM by PIB Chennai
மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தலைமை தொழிலாளர் நல ஆணையர் (மத்தி) அலுவலகத்தால் புதுதில்லி பிராந்தியத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தொழிலாளர் வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான சிறப்பு இயக்கத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2026 ஜூன் 1 அன்று தொடங்கிய இந்த இயக்கம் 2026 ஆகஸ்ட் 31 வரை நடைபெறுகிறது.
தில்லி மெட்ரோ ரயில் கழகம் தொடர்பான 178 உரிமை கோரல் வழக்குகள் விசாரணைக்கும் பைசல் செய்வதற்கும் அடையாளம் காணப்பட்டன. புதுதில்லி ஆணையத்தின் ஊதியங்கள் சட்டம் 2019-ன் கீழ், நோட்டீஸ் அனுப்ப மண்டல தொழிலாளர் நல ஆணையர் (மத்தி) 15.06.2026 அன்று உத்தரவிட்டார். வழக்கோடு தொடர்புடையவர்கள் 24.06.2026 அன்று ஆஜராகவும் அவர் உத்தரவிட்டார்.
முன்னெப்போதும் இல்லாத வகையில், நிலுவை வழக்குகளைக் குறைத்து விரைவாக நீதி வழங்குவதை உறுதி செய்ய 178 வழக்குகளும் ஒரே நாளில் விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளன.
நிலுவை வழக்குகளை விரைந்து முடிப்பதன் முக்கியத்துவத்தையும் தொழிலாளர்கள், தொழில் உரிமையாளர்கள், சம்பந்தப்பட்டவர்களின் தாக்கத்தையும் அங்கீகரித்த தில்லி மெட்ரோ ரயில் கழகத்தின் கூடுதல் பொது மேலாளர், வரவிருக்கும் சிறப்பு இயக்கம் வெற்றிகரமாக நடைபெற முழு ஒத்துழைப்புத்தர உறுதியளித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276547®=3&lang=1
***
SS/SMB/KPG/SH
(रिलीज़ आईडी: 2276822)
आगंतुक पटल : 9