பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார்
இடுகை இடப்பட்ட நாள்:
22 JUN 2026 5:17PM by PIB Chennai
ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலை புதுதில்லியில் உள்ள கடமை மாளிகையில், மத்திய அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், ஊழியர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி, விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று (22.06.2026) வெளியிட்டார்.
ஆட்சி முறையில், தொழில்நுட்பத்தின் பங்கு அதிகரித்து வரும் நிலையில், இணைய வழியிலான அதிகாரிகள் பட்டியல் போன்ற டிஜிட்டல் தளங்கள், நிர்வாகத் திட்டமிடலுக்கும் திறன் கண்டறிதலுக்கும் நாடு முழுவதும் மனித வளங்களைப் பயனுள்ள வகையில் பணியமர்த்துவதற்கும், முக்கியமான கருவிகளாக உருவெடுத்துள்ளன என்று அவர் கூறினார். அதிகாரிகளின் கல்வித்தகுதி, அனுபவம், பணி நியமனங்கள் தொடர்பான தகவல்களை எளிதாக அணுக முடியும் என்பதால் அரசுகளுக்கும் நிறுவனங்களுக்கும் முடிவுகள் எடுப்பது ஒட்டுமொத்த நிர்வாகத்தை வலுப்படுத்துவது என்ற கட்டமைப்புக்கு இது உதவியாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
மாநில அரசுகள், பல்வேறு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஒவ்வொரு ஆண்டும் இதனைப் புதுப்பிக்க மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை தீவிர முயற்சி செய்து தரவுத் தளத்தை பராமரிப்பதாக அமைச்சர் கூறினார். தரவுத் தளத்தால் இயக்கப்படும் நிர்வாகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், இந்திய குடிமைப்பணி அதிகாரிகளின் நிலையை வலுப்படுத்துவது பற்றி எடுத்துரைத்ததோடு மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் தேவைப்படும் மனித ஆற்றல் பற்றியும் குறிப்பிட்டார்.
ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியல் மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறையின் https://dopt.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கும்
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276708®=3&lang=1
****
TV/SMB/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2276791)
வருகையாளர் எண்ணிக்கை : 48