குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

யோகாவை வாழ்வில் ஒரு அங்கமாக கடைபிடிக்குமாறு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.

प्रविष्टि तिथि: 21 JUN 2026 1:23PM by PIB Chennai

குடியரசு  துணைகத் தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன், லடாக் யூனியன் பிரதேசத்தின் லே நகரில் நடைபெற்ற சர்வதேச யோகா தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் இன்று பங்கேற்றார். ஆரோக்கியமான, மகிழ்ச்சியான, அமைதியான சமூகத்தை உருவாக்க, யோகாவைத் தங்களது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற்றிக் கொள்ளுமாறு குடிமக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கம்பீரமான இமயமலைச் சூழலில், கூடியிருந்த மக்களிடையே உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர், யோகா வெறும் உடற்பயிற்சி மட்டுமின்றி, மனிதகுலத்திற்கு இந்தியா அளித்த ஒரு பழமையான கொடை என்று கூறினார். பல ஆண்டுகால தியானம், தவ வாழ்க்கை, ஆன்மீகத் தேடல் ஆகியவற்றின் மூலம், இந்தியாவில் உள்ள முனிவர்கள் உடலைப் பேணிக் காப்பதற்கும், மனதை அமைதிப்படுத்துவதற்கும், ஆன்மாவை மேம்படுத்தும் ஒரு முழுமையான முறையை உருவாக்கினர் என்று அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ், யோகக்கலைக்கான உலகளாவிய அங்கீகாரம் புதிய உத்வேகம் பெற்று வருவதை குடியரசு துணைத் தலைவர் சுட்டிக்காட்டினார். 2014-ல் நா பொதுச் சபையில் பிரதமர் விடுத்த அழைப்பை ஏற்று, 175-க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக நா சபை அறிவித்தது.

இந்த ஆண்டிற்கான கருப்பொருளான ஆரோக்கியமான முதுமைக்கான யோகாஎன்பதைக் குறிப்பிட்ட திரு சி. பி. ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், அதிகரித்து வரும் ஆயுட்காலம் ஆகியவை சமூகத்திற்குப் புதிய பொறுப்புகளைக் கொண்டு வந்துள்ளன என்று கூறினார். இந்தியாவில் மூத்தகுடிமக்களின் முதுமை குறித்த அறிக்கை 2023'- மேற்கோள் காட்டிப் பேசிய வரும் 2050-ம் ஆண்டிற்குள் நாட்டின் மக்கள் தொகையில்  ஐந்தில் ஒரு பகுதியினர் மூத்த குடிமக்களாக இருப்பார்கள் என்று குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276047&reg=3&lang=1

***

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2276367) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी , Gujarati , Malayalam