தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
பிகானேரில் மாபெரும் யோகா அமர்வு - மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் பங்கேற்றனர்
प्रविष्टि तिथि:
21 JUN 2026 11:59AM by PIB Chennai
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ரயில்வே, தகவல் - ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், மத்திய சட்டத்துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் உள்ள கர்னி சிங் மைதானத்தில் பெருந்திரளான மக்களுடன் நடைபெற்ற மாபெரும் யோகா அமர்வில் பங்கேற்றனர். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்த செய்தியை அவர்கள் எடுத்துரைத்தனர்.
யோகா என்பது இந்தியாவின் தொன்மையான மற்றும் விலைமதிப்பற்ற பாரம்பரியம் என்றும், பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ் தற்போது உலகம் முழுவதும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். யோகாவைத் தொடர்ந்து பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், மன அமைதி, நேர்மறை சிந்தனை, மன அழுத்தமில்லாத வாழ்க்கை ஆகியவற்றையும் ஊக்குவிக்கிறது என்று அவர் கூறினார். மக்கள் யோகாவைத் தங்கள் அன்றாட வழக்கத்தில் இணைத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
யோகா என்பது இந்திய கலாச்சாரம், வாழ்க்கைத் தத்துவம் ஆகியவற்றின் ஒரு ஒருங்கிணைந்த பகுதி என்று மத்திய இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் கூறினார். ஆரோக்கியமான உடல், ஆரோக்கியமான மனதின் மூலமே ஒரு வலுவான சமூகத்தையும், வளர்ந்த தேசத்தையும் கட்டியெழுப்ப முடியும் என்று அவர் குறிப்பிட்டார். யோகாவானது, ஒழுக்கம், சுயக்கட்டுப்பாடு, சமநிலையைக் கற்றுத் தருவதால் ஒவ்வொருவரும் அதைத் தங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று திரு அர்ஜுன் ராம் மேக்வால் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், ஏராளமான பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்வேறு அரசுத் துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பங்கேற்பாளர்கள், யோகா பயிற்றுனர்களின் வழிகாட்டுதலின் கீழ் பல்வேறு யோகாசனங்கள், பிராணாயாமம், தியானம் ஆகியவற்றைப் பயிற்சி செய்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275981®=48&lang=1
****
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2276266)
आगंतुक पटल : 7