இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்கை அடைய யோகாவும், உடற்தகுதியும் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாற வேண்டும்: மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா

प्रविष्टि तिथि: 21 JUN 2026 12:50PM by PIB Chennai

ஆரோக்கியமான முதுமைக்கான யோகா என்ற கருப்பொருளின் கீழ் நாடு முழுவதும் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிகளில் பெருமளவிலான மக்கள் பங்கேற்ற நிலையில், 12-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி கொல்கத்தாவில்   இன்று தொடங்கி வைத்தார்.

தலைநகர் தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற யோகா தினக் கொண்டாட்டங்களுக்கு, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, பிரபல திரைப்பட நடிகரும், உடற்தகுதிக்கு முன்னுதாரணமாகத் திகழ்பவருமான அக்ஷய் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறையின் கீழ் செயல்படும் 'ஃபிட் இந்தியா இயக்கம்' ஏற்பாடு செய்திருந்த இந்த மாபெரும் யோகா நிகழ்ச்சியில், 3,000 பேர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் மாண்டவியா, வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா உருவெடுப்பதற்கு, யோகாவும் உடற்தகுதியும் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாற வேண்டும், என்று கூறினார்.

நாடு முழுவதும் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய மையங்கள், தேசிய சிறப்பு மையங்கள், பயிற்சி மையங்கள், 'கேலோ இந்தியா' நிறுவனங்கள் உள்ளிட்ட பிற விளையாட்டு வளாகங்களிலும் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276016&reg=3&lang=1

****

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2276145) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी , Gujarati