ஆஸ்கர் விருது வென்ற குறும்படங்கள் மும்பை திரைப்பட விழாவில் பார்வையாளர்களை ஈர்த்தன
குறும்படங்கள், ஆவணப்படங்கள், அனிமேஷன் ஆகியவை மூலம் உலகத் தரம் வாய்ந்த கதைசொல்லலின் மாபெரும் கொண்டாட்டமாக அமைந்துள்ள 19-வது மும்பை சர்வதேச திரைப்பட விழா- 2026, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
விழாவின் மிகவும் பிரபலமான அம்சங்களில் ஒன்றான 'ஆஸ்கார் வெற்றியாளர்கள்' பிரிவில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அகாடமி விருது வென்ற குறும்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தச் சிறப்புப் பிரிவு, தற்கால உலகளாவிய சினிமாவின் மிகச்சிறந்த சில படைப்புகளை இந்தியப் பார்வையாளர்களுக்குக் கொண்டுவந்து, அதன் சிறப்பான படைப்பாற்றல், புதுமை, உணர்வுப்பூர்வமான கதைசொல்லல் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.
மும்பை சர்வதேச திரைப்பட விழாவில், நான்கு தலைசிறந்த ஆஸ்கர் விருது வென்ற படங்கள் திரையிடப்பட்டன.
* ஐஎம் நாட் எ ரோபோ (பெல்ஜியம், நெதர்லாந்து)
* இன் தி ஷேடோ ஆஃப் தி சைப்ரஸ் (ஈரான்)
* தி கேர்ள் ஹூ க்ரைட் பியர்ள்ஸ் (கனடா)
* டூ பியூப்பிள் எக்ஸ்சேஞ்சிங் சலைவா (பிரான்ஸ், அமெரிக்கா)
இந்தத் திரையிடல்கள், மாணவர்கள், வளரும் திரைப்பட இயக்குநர்கள், சினிமா ஆர்வலர்கள் ஆகியோருக்கு, மும்பையிலேயே சர்வதேச குறும்படத் தயாரிப்பின் மிக உயர்ந்த தரத்தை அனுபவிப்பதற்கான ஒரு மதிப்புமிக்க வாய்ப்பை வழங்கின. பார்வையாளர்கள் இப்படங்களுக்கு அமோக வரவேற்பு அளித்தனர். திரையிடல்களுக்குப் பிறகு உற்சாகமாகக் கைதட்டியதோடு, படங்களில் வெளிப்பட்டிருந்த பல்வேறு கதை சொல்லும் பாணிகள், கலைச் சிறப்பு, உணர்வு ஆழம் ஆகியவற்றையும் பாராட்டினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275662®=3&lang=1
Release ID : 2275662
****
TV/PLM/SH
रिलीज़ आईडी:
2275764
| Visitor Counter:
14