திரைப்படத் தயாரிப்பாளர்களின் மிகச்சிறந்த கருவி கேமரா அல்ல, ஆர்வம்தான்: மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் ஆவணப்பட இயக்குநர் திரு சஞ்சீவ் சிவன் கருத்து
19-வது மும்பை சர்வதேசத் திரைப்பட விழாவில் இன்று 'சமூக விழிப்புணர்வு திரைப்படம்: பிரச்சினைகளைக் கதைகளாக மாற்றி முன்னிலைப்படுத்துதல்' என்ற தலைப்பில் சிறப்புப் பயிற்சி வகுப்பை நடத்திய தேசிய விருது பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவணப்பட இயக்குநருமான திரு சஞ்சீவ் சிவன், தொழில்நுட்பத்தை விடவும் ஆர்வத்திற்கே முன்னுரிமை அளிக்குமாறு வளர்ந்து வரும் கதைசொல்லிகளுக்கு அறிவுறுத்தினார்.
75-க்கும் மேற்பட்ட ஆவணப்படங்கள், 30-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் மற்றும் பல்வேறு முழுநீளத் திரைப்படங்களை உள்ளடக்கிய தனது நீண்டகாலப் பணி அனுபவத்தின் அடிப்படையில், நிஜ வாழ்க்கைச் சிக்கல்களை தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான திரைப்படக் கதைகளாக மாற்றுவது குறித்த நுணுக்கங்களை திரு சிவன் பங்கேற்பாளர்களுக்கு விளக்கினார்.
"உங்களிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், கேமரா அல்ல, ஆர்வம்தான்," என்று கூறிய சிவன், விலையுயர்ந்த உபகரணங்களை விட கூர்ந்து கவனித்தல், ஆய்வு மற்றும் மக்களுடனான உண்மையான ஈடுபாடு ஆகியவற்றிலிருந்தே ஈர்க்கக்கூடிய கதைகள் உருவாகின்றன என்றும் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275383®=3&lang=1
(Release ID: 2275383)
***
TV/BR/SH
रिलीज़ आईडी:
2275675
| Visitor Counter:
6