எதிர்கால தலைமுறையினருக்கு வரலாறு, கலாச்சாரத்தைப் பாதுகாக்க ஆவணப் படங்கள் உதவுகின்றன
மும்பையில் நடைபெற்று வரும் 19-வது மும்பை சர்வதேச திரைப்படவிழாவில் இந்திய ஆவணப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓடிடி தளங்கள், சமூக ஊடகங்கள், ஆவணப்படத்துறைகளைச் சேர்ந்த நிபுணர்களை ஒன்றிணைத்து ஸ்டீரிமிங் தளங்கள் ஆவணப்படத் தயாரிப்பில் எவ்வாறு புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஆவணப்படத் தயாரிப்பு சங்கக் குழுவின் வர்த்தகப் பிரிவுத்தலைவர் திரு கின்னாரி தேவ், வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தின் தெற்காசிய தலைவர் திரு சாய் அபிஷேக், மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான திரு ரமேஷ் படேங்கே, மூத்த ஒளிப்பதிவாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான திரு தரம் குலாத்தி ஆகியோர் பங்கேற்றனர்.
மாறிவரும் பார்வையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப திரைப்படங்களை எடுக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து திரு கின்னாரி எடுத்துரைத்தார். மேலும் ஆவணப்படத் தயாரிப்பாளர்கள் புதுமையான யோசனைகளுடன் ஓடிடி தளங்களை அணுக வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு ரமேஷ் படேங்கே, இந்தியாவின் கலாசாரப் பாரம்பரியம், தேசிய விழுமியங்களை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவதற்கான ஊடகமாக ஆவணப் படங்கள் திகழ்வதாகக் குறிப்பிட்டார். நாட்டின் வரலாற்றைப் பாதுகாக்கவும், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆவணப் படங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது என்று திரு ரமேஷ் படேங்கே கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275179®=3&lang=1
***
TV/SV/KPG/SH
रिलीज़ आईडी:
2275376
| Visitor Counter:
9