19-வது மும்பை சர்வதேச திரைப்பட விழா: மனித உணர்வுகளைப் பிரதிபலித்த திரைப்படங்கள் திரையிடப்பட்டன
19-வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவின் சிறப்புப் பகுதியான 'மிட் ஃபெஸ்ட்' பிரிவில் திரையிடப்பட்ட மூன்று சர்வதேச திரைப்படங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. 'ஈனி, மீனி, மைனி, மோ!', 'ஹைனா', 'ஐ லவ் யூ, ஐ லீவ் யூ' ஆகிய இந்தத் திரைப்படங்கள் மனித நடத்தையின் பல்வேறு பரிமாணங்களை அழகாகக் காட்சிப்படுத்தின.
ஆண்ட்ரியா செலோசோவா இயக்கிய 'ஈனி, மீனி, மைனி, மோ!' என்ற அனிமேஷன் படம், சக மனிதர்களுடன் பழக சிரமப்படும் ஒரு சிறுவனின் கதையின் மூலம் சமூக உள்ளடக்கம், ஏற்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விவரித்தது. அல்தாய் உலான் யாங் இயக்கிய 'ஹைனா' என்ற குறும்படம், குழு மனப்பான்மையின் ஆபத்தான வன்முறைப் பக்கத்தை அழுத்தமாகப் பதிவு செய்தது. மோரிஸ் ப்ரீபர்க்ஹாஸ் இயக்கிய 'ஐ லவ் யூ, ஐ லீவ் யூ' என்ற ஆவணப்படம், சுவிஸ் இசைக் கலைஞர் டினோ பிராண்டோவின் சுயசரிதை, சமூகக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான அவரது போராட்டத்தை இசையின் மூலம் வெளிப்படுத்தியது. இந்த மூன்று திரைப்படங்களும் மனித உணர்வுகளின் சிக்கலான தன்மைகளை சர்வதேச பார்வையாளர்களுக்குக் கடத்துவதில் பெரும் வெற்றி பெற்றுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275084®=3&lang=1
***
SS/PD/RJ
வெளியீட்டு அடையாள எண்:
2275358
| Visitor Counter:
52