ஆயுஷ்
சர்வதேச யோகா தினத்தையொட்டி கொல்கத்தாவில் நடைபெறும் மாரத்தான் ஓட்டத்தை மேற்கு வங்க முதலமைச்சர் திரு சுவேந்து அதிகாரி தொடங்கி வைக்கிறார்
प्रविष्टि तिथि:
19 JUN 2026 12:32PM by PIB Chennai
சர்வதேச யோகா தினத்தையொட்டி, சுகாதாரம், தூய்மை, சமூகப் பொறுப்புணர்வு, அனைவருக்கும் நல்வாழ்வு போன்ற முக்கிய அம்சங்களை வலியுறுத்தும் வகையில், தூய்மையே சேவை திட்டத்தின் கீழ், தனித்துவ முன்முயற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் இம்மாதம் 29-ம் தேதி அன்று மாரத்தான் ஓட்டத்தை அம்மாநில முதலமைச்சர் திரு சுவேந்து அதிகாரி, மத்திய ஆயுஷ் மற்றும் சுகாதாரத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்கின்றனர். முழுமையான சுகாதாரம் மற்றும் நல்வாழ்வை ஊக்குவிக்கும் வகையில், யோகா நிகழ்ச்சியைத் தொடர்ந்து இந்த மாரத்தான் ஓட்டம் நடைபெற உள்ளது.
சர்வதேச யோகா தினத்தையொட்டி நடைபெறும் யோகா அமர்வில், அம்மாநில அமைச்சர்கள் திரு இந்திரானில் கான், திருமதி அக்னிமித்ரா பால், திரு தபஸ்ராய், சட்டப்பேரவை உறுப்பினர்கள் திரு பிஜய் ஓஜா, மேற்கு வங்க தலைமைச் செயலாளர் டாக்டர் மனோஜ் குமார் அகர்வால், மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்திய ராஜேஷ் கொட்டேச்சா, முன்னாள் டென்னிஸ் வீரர் திரு லியாண்டர் பயஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கொல்கத்தாவில் 11 இடங்களில் ஒரே நேரத்தில் 2 கிமீ தொலைவிற்கான யோகா ஓட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யோகக் கலையின் மூலம் நலமான வாழ்வியல் முறையை மக்களிடையே ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமூகத்தின் பல்வேறு பிரிவிலிருந்து மக்கள் இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் பங்கேற்கின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275046®=3&lang=1
***
TV/SV/KPG/RJ
(रिलीज़ आईडी: 2275350)
आगंतुक पटल : 11