பிரதமர் அலுவலகம்
இளையோருக்கு அதிகாரமளித்தல், பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான வேலைவாய்ப்புத் திட்டம் குறித்தக் கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
19 JUN 2026 2:31PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா எழுதியுள்ள கட்டுரையை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்கை எட்டுவதற்கு இளையோருக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கி, அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதை இந்தக் கட்டுரை வலியுறுத்துவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான வேலைவாய்ப்புத் திட்டம், ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் அதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு உதவிடும் அதே வேளையில் நாட்டைக் கட்டமைப்பதில் இளைஞர்கள் பங்காற்றவும் உதவிடும் என்று இந்தக் கட்டுரைக் குறிப்பிடுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“இளைஞர்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகளை வழங்கி, அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதே வளர்ச்சியடைந்த இந்தியா திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான வேலைவாய்ப்பு திட்டம், ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் ஊக்குவிக்கும். நாட்டைக் கட்டமைப்பதில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பதற்கு இத்திட்டம் உந்து சக்தியாக அமையும்.
மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா எழுதியுள்ள இந்தக் கட்டுரையை அனைவரும் படித்து அறிந்து கொள்ளவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275111®=3&lang=1
***
(Release ID: 2275111
TV/SV/KPG/RJ
(रिलीज़ आईडी: 2275331)
आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam