PIB Backgrounder
azadi ka amrit mahotsav

தேசப் பாதுகாப்பு: தீவிரவாதத்திற்கு எதிரான மத்திய அரசின் 12 ஆண்டுகால சகிப்புத்தன்மையற்ற கொள்கை

प्रविष्टि तिथि: 19 JUN 2026 10:57AM by PIB Chennai

கடந்த 12 ஆண்டுகளில் தீவிரவாதத்திற்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தீவிரவாதத்திற்கு எதிராக சகிப்புத்தன்மையற்ற கொள்கையை உறுதியுடன் கடைப்பிடித்து வருகிறது. சட்டக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், புலனாய்வு அமைப்புகளை ஒருங்கிணைத்தல், பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்குதல் போன்ற பல்துறை சார்ந்த நடவடிக்கைகள் மூலம் நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இணையப் பாதுகாப்பை மேம்படுத்தியதன் மூலம் டிஜிட்டல் அச்சுறுத்தல்களும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன. இத்தகைய தொடர் முயற்சிகளால் தீவிரவாதச் சம்பவங்கள், பொதுமக்கள், பாதுகாப்புப் படையினரின் உயிரிழப்புகள் பெருமளவில் குறைந்து நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றபோது, பல தசாப்தங்களாக நிலவி வந்த பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கடந்த பத்தாண்டுகளில் தீவிரவாத அமைப்புகளின் நிதி ஆதாரங்கள் முற்றிலுமாக முடக்கப்பட்டன. புலனாய்வு விசாரணை அமைப்புகளுக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. சர்வதேச அரங்கில் தீவிரவாதத்திற்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 12 ஆண்டுகால உழைப்பு மூன்று முக்கிய இலக்குகளை அடைந்துள்ளது. முதலாவது, பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுத்தல். இரண்டாவது, வலுவான சட்ட பாதுகாப்பைக் கொண்ட வளர்ச்சி. மூன்றாவதாக, சாமானிய மக்களின் நலனை உறுதி செய்தல். இதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் 'பிரகார்' என்ற தேசிய தீவிரவாத எதிர்ப்பு வியூகக் கொள்கையை வகுத்துள்ளது.  சட்டப்பூர்வ அதிகாரங்கள் மூலம் நிறுவனங்களை வலுப்படுத்தி தீவிரவாதத்தை ஒடுக்க 2019-ல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் தீவிரவாத நடவடிக்கைளை மேற்கொள்ளும் அமைப்புகளை மட்டுமின்றி, தனிநபர்களையும் தீவிரவாதிகளாக அறிவிக்கும் அதிகாரத்தை அரசு அமைப்புகள் பெற்றன. தேசிய புலனாய்வு முகமைக்கு விசாரணை தொடர்பாக கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. மேலும், புதிய குற்றவியல் சட்டம் 2023 (பிஎன்எஸ்)-ன் கீழ் தீவிரவாதச் செயல்களுக்கு மரண தண்டனை, ஆயுள் தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.  தேசிய புலனாய்வு முகமைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த பத்து ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வீதம் உலக அளவில் மிக அதிகமாக (92.70 சதவீதமாக) உயர்ந்துள்ளது. அனைத்துக் காவல் நிலையங்களையும் இணைக்கும் நவீன குற்றக் கண்காணிப்பு கட்டமைப்பு போன்ற தொழில்நுட்ப அம்சங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன.  எல்லை தாண்டிய தீவிரவாதம், 2016-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட துல்லியத் தாக்குதல், 2019 பாலக்கோட் வான்வழித் தாக்குதல், 2025-ம் ஆண்டின் ஆபரேஷன் சிந்தூர் ஆகியவை தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு மத்திய அரசின் வலுவான பதிலடி நடவடிக்கைகளாகும்.  ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு அங்கு பாதுகாப்புச் சூழல் மேம்பட்டுள்ளது. அந்த பிராந்தியத்தில் தீவிரவாதச் சம்பவங்கள் 2018-ல் 228 ஆக இருந்து, 2025-ல் வெறும் 12 ஆகக் குறைந்துள்ளன. கல்வீச்சுச் சம்பவங்கள் முற்றிலும் தடுக்கப்பட்டு அமைதி திரும்பியுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு 2024-ல் 2.3 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகளும் முதலீடுகளும் அதிகரித்துள்ளன. மத்திய அரசின் இத்தகைய ஒருங்கிணைந்த முயற்சிகள் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை பலப்படுத்தி எதிர்கால சவால்களையும் சமாளிக்கும் திறனையும் வழங்கியுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275007&reg=3&lang=1  

***

TV/PD/RJ


(रिलीज़ आईडी: 2275327) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Bengali