குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஜூன் 18 முதல் 22 வரை மத்தியப் பிரதேசம், ஒடிசா மாநிலங்களுக்கு குடியரசுத்தலைவர் பயணம்

प्रविष्टि तिथि: 17 JUN 2026 8:24PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, 2026 ஜூன் 18 முதல் 22 வரை மத்தியப் பிரதேசம், ஒடிசா மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜூன் 18 அன்று, மத்தியப் பிரதேசத்தின் பெதுல் பகுதியில், பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயா அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆன்மீக விழிப்புணர்வு மூலம் பழங்குடியின சமூகத்தை வலுப்படுத்துதல் என்ற நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் பங்கேற்கவுள்ளார்.

ஜூன் 19 அன்று, மத்தியப் பிரதேசத்தின் ஓம்காரேஷ்வரில் நடைபெறும் சர்வதேச அரிவாள் செல் ரத்த சோகை நோய் விழிப்புணர்வு தினக் கொண்டாட்டங்களில் குடியரசுத்தலைவர் பங்கேற்கவுள்ளார். அதே நாளில், ஒடிசாவின் ராய்ரங்பூரில், புவனேஷ்வர் எய்ம்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள மருத்துவ முகாம், குசுமி வட்டாரத்தில் சுரங்கத் தொழிலால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கான பிரம்மாண்டமான ஒருங்கிணைந்த குழாய் வழி குடிநீர் விநியோகத் திட்டம், பிரம்ம குமாரிகளின் 'மாத்ருசக்தி பவன்', ராய்ரங்பூர் காவல் மாவட்டம் ஆகியவற்றை அவர் தொடங்கி வைக்கவுள்ளார்.

ஜூன் 20 அன்று, குடியரசுத்தலைவரும் பிரதமர் திரு நரேந்திர மோடியும்  பஹத்பூரில் உள்ள பள்ளி, திறன் மேம்பாட்டு மையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களைப் பார்வையிட்டு, பயனாளிகள், குழந்தைகளுடன் கலந்துரையாடுவார்கள். பின்னர், அவர்கள் ராய்ரங்பூரில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.

ஜூன் 21 அன்று, மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் நடைபெறும் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களில் குடியரசுத்தலைவர் பங்கேற்பார். அதே நாளில், ஜபல்பூரில் உள்ள ராணி துர்காவதி பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவிலும் அவர் கலந்துகொள்வார்.

ஜூன் 22 அன்று, மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில், சஹாரியா பழங்குடியினர், சிறுத்தைகளின் தடங்களைக் கண்காணிப்பவர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், குனோ களப்பணிக் குழுவினருடன் குடியரசுத்தலைவர் கலந்துரையாடுவார்.

***

(Release ID: 2274262)

SS/RB/RJ


(रिलीज़ आईडी: 2275133) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati , Odia , Malayalam