MIFF banner

திரைக்கலை உலகை புதிய கோணத்தில் அலசிய மும்பை சர்வதேச திரைப்பட விழா

மும்பையில் நடைபெறும் 19-வது சர்வதேச திரைப்பட விழாவில் , "பல வடிவங்கள், ஒரே பார்வை" என்ற தலைப்பில் நடைபெற்ற வட்டமேஜை மாநாடு, திரைக்கலை உலகை புதிய கோணத்தில் அலசியது.

 

இந்த விழாவை நெறிப்படுத்திய நடிகை ஷீனா சௌஹான், கதைகள் மக்களைக் கலாச்சார எல்லையைக் கடந்து பிணைக்கின்றன என்றார். திரைப்பட விழா என்பது வெறும் திரையிடல் மட்டுமல்ல; அது ஒரு சமூக உணர்வுப்பூர்வமான அனுபவம் என்று ஆனந்த் வரதராஜ் குறிப்பிட்டார். பெருநகரங்களுக்குப் போட்டியாக, இன்று சிறு நகரங்களும், தாய்மொழிக் கதைகளும் உலக அரங்கில் மின்னுகின்றன. செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் கதை சொல்லும் விதத்தை மாற்றினாலும், பார்வையாளர்கள் உணர்வுப்பூர்வமான நேர்மையையே  தேடுகிறார்கள் என்றார்.

 

பிரேமேந்திர மஜும்தார், டிஜிட்டல் புரட்சியால் விழாக்கள் பெருகினாலும், அதன் அடிப்படை விழுமியங்களைக் காக்க வேண்டியது அவசியம் என்றார். சாவித்ரி ஹரி, அனிமேஷன் துறையின் வளர்ந்து வரும் வாய்ப்புகளைப் பட்டியலிட்டதோடு, படைப்பாளிகள் சர்வதேசச் சந்தைக்கேற்ப தங்களை வடிவமைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

திரைப்படங்களை வருங்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை பிரகாஷ் மாக்டம் வலியுறுத்தினார். பழங்குடியினரின் கதைகளை உலகிற்குச் சொல்ல திரைப்பட விழாக்கள் பாலமாக உள்ளன என்று தீபக் குமார் பெஹ்ரா கூற, ஆவணப்படங்கள் சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கின்றன என்றார் நிலோத்பால் மஜும்தார்.

 

இறுதியாக, "படங்கள் இயக்குநரின் ஆழ்ந்த நம்பிக்கை சார்ந்தவை" என்ற கருத்துடன் இந்தச் சிந்தனைப் பகிர்வு நிறைவுபெற்றது. திரைப்பட விழாக்கள் கலைப் பரிமாற்றத்திற்கான உயிர்நாடியாகவும், புதிய படைப்பாளிகளின் திறமைகளை வெளிப்படுத்தும் நுழைவாயிலாகவும் தொடர்ந்து திகழ்கின்றன என்று வல்லுநர்கள் ஒருமனதாகக் கருத்து தெரிவித்தனர்.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274746&reg=3&lang=1

செய்தி அடையான எண்:2274746

****

TV/VK/SH


Great films resonate through passionate voices. Share your love for cinema with #MIFF2026. Tag us @pibmumbai on X, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at miff.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


रिलीज़ आईडी: 2274955   |   Visitor Counter: 12