மக்களவை செயலகம்
சமணத் தத்துவங்கள் உலகிற்கு அமைதியைத் தருகின்றன: மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா
இடுகை இடப்பட்ட நாள்:
18 JUN 2026 5:22PM by PIB Chennai
ராய்ப்பூரில் நடைபெற்ற பரம பூஜ்ய ஆச்சார்ய ஸ்ரீ வினய் குஷல் ஜி மகராஜ் அவர்களின் ஆச்சார்ய பொறுப்பேற்பு விழாவில் மக்களவைத் தலைவர் திரு. ஓம் பிர்லா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், சமணத் தத்துவங்களும் சிந்தனைகளும் இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
இன்றைய நவீன உலகில் மன அழுத்தம், மோதல்கள் மற்றும் தார்மீகச் சரிவு பெருகியுள்ள நிலையில், சமண மதத்தின் போதனைகள் அமைதி மற்றும் சுயக் கட்டுப்பாட்டிற்கு வழிகாட்டுவதாக அவர் தெரிவித்தார். உலக அமைதிக்கு அகிம்சை, கருணை மற்றும் தயாள குணம் மிக அவசியம் என்றும், பொருள் சார்ந்த வாழ்க்கையை விட சுயக்கட்டுப்பாடு, மன உறுதி மற்றும் தூய்மையான சிந்தனையே உண்மையான மகிழ்ச்சியைத் தரும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சமண முனிவர்களின் தியாகம், கடுமையான விரதங்கள் மற்றும் ஆன்மீக ஒழுக்கம் ஆகியவை சமூகத்திற்குத் தூய வழியைக் காட்டுகின்றன என்று அவர் புகழாரம் சூட்டினார். இளைஞர்கள் சமண முனிவர்களின் வாழ்வைப் பின்பற்றி பொறுமை மற்றும் தார்மீக விழுமியங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த விழாவில் சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு. விஷ்ணு தேவ் சாய், சட்டப்பேரவைத் தலைவர் டாக்டர் ராமன் சிங் மற்றும் மத்திய அமைச்சர் திரு. தோகன் சாஹு உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274687®=3&lang=1
செய்தி அடையான எண்:2274687
****
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2274953)
வருகையாளர் எண்ணிக்கை : 33