MIFF banner

19-வது மும்பை சர்வதேச திரைப்பட விழா 2026: வேவ்ஸ் டாக் பஜாரின் 2வது பதிப்பில் விருதுகள் வழங்கப்பட்டன

19-வது மும்பை சர்வதேச திரைப்பட விழா 2026-ன் வேவ்ஸ் டாக் பஜாரின் 2வது பதிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விருது வழங்கும் விழா ஜேபி ஹாலில் இன்று (2026 ஜூன் 18 அன்று) நடைபெற்றது.

இதில் திரைப்பட இயக்குநர் கரிஷ்மா ராவுக்கு  'ஆன் எ குட் நோட்' என்ற ஆவணப்படத்திற்காகவும், திரைப்பட இயக்குநர் இந்திரஜித் மோரேக்கு  ‘இட் டேக்ஸ் ஏ வில்லேஜ் ’ என்ற முழு நீள ஆவணப்படத்திற்காகவும்  பிரசாத் லேப் போஸ்ட் புரொடக்ஷன் விருது வழங்கப்பட்டது. பிரசாத் லேப்ஸ் பொது மேலாளர் திரு  நிதின் பிங்ளே விருதுகளை வழங்கினார்.

அடியு டில்லி என்ற ஆவணப்படத்திற்காக திரைப்பட தயாரிப்பாளர்கள் நந்தன் சக்சேனாவுக்கும் கவிதா பாஹிக்கும், தோ சார் தின் என்ற ஆவணப்படத்திற்காக திரைப்பட தயாரிப்பாளர் சான்யா ஆனந்திற்கும் ஐஐசிடி போஸ்ட் புரொடக்ஷன் விருதுகள் வழங்கப்பட்டன. இந்திய படைப்பாக்க தொழில்நுட்பங்கள் நிறுவனத்தின் (ஐஐசிடி) கல்விப் பிரிவு இயக்குநர் திரு சதிஷ் நாராயணன் இந்த விருதுகளை வழங்கினார்.

திரைப்பட இயக்குநர் கரிஷ்மா ராவுக்கு  'ஆன் எ குட் நோட்' என்ற ஆவணப்படத்திற்காக ரீ பார்ன் இந்தியா திரைப்பட விநியோக விருது வழங்கப்பட்டது. இதனை ரீ பார்ன் இந்தியா திரைப்பட விநியோக நிறுவனத்தின் திரு ராகுல் அகர்வால், திரு ரோஹித் அகர்வால் ஆகியோர் வழங்கினர்.

'கஞ்சோக்  அண்ட் ஹிஸ் மெனி மூன்ஸ்' என்ற திரைப்படத் தயாரிப்பிற்காக திரைப்பட தயாரிப்பாளர் அசோக் மீனாவுக்கும், 'த கேர்ள் பிநீத் த சன்' என்ற திரைப்படத் தயாரிப்புத் திட்டத்திற்காக திரைப்பட தயாரிப்பாளர் மதுரிமா மைட்டிக்கும் துக்ரோ  துக்ரோ  ப்ரீத்பி  என்ற திரைப்படத் தயாரிப்புத் திட்டத்திற்காக திரைப்பட தயாரிப்பாளர் அஸ்மிதா பாலுக்கும் தலா 1 லட்சம் ரூபாய் என்எஃப்டிசி ரொக்க மானியம் வழங்கப்பட்டது. இதனை தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் திரு பிரகாஷ் மேக்டம் வழங்கினார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274686&reg=3&lang=1

****

TV/SMB/SH


Great films resonate through passionate voices. Share your love for cinema with #MIFF2026. Tag us @pibmumbai on X, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at miff.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


रिलीज़ आईडी: 2274875   |   Visitor Counter: 11