இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
வளர்ச்சியடைந்த இந்தியா உருவாக இளைஞர்களின் பங்களிப்பு முக்கியம் - அமைச்சர் திருமதி ரக்ஷா காட்சே
प्रविष्टि तिथि:
17 JUN 2026 5:05PM by PIB Chennai
'வளர்ச்சியடைந்த இந்தியா 2047' என்ற இலக்கை அடைய, நாட்டின் இளைஞர்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டும் இருக்காமல், ஆக்கப்பூர்வமான பங்களிப்பாளர்களாக மாற வேண்டும் என்று மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சர் திருமதி ரக்ஷா கட்சே வலியுறுத்தியுள்ளார்.
புதுதில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நாடாளுமன்ற மைய மண்டபத்தில், 'வளர்ச்சியடைந்த இந்தியா இளைஞர் நாடாளுமன்றம் 2026' நிகழ்ச்சியின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 105 இளம் தலைவர்கள் பங்கேற்றனர். ஜனநாயகக் கடமைகள், நாடாளுமன்ற விவாதங்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து இந்த இளைஞர்கள் விவாதித்தனர்.
இளைஞர்களின் கனவுகளையும், ஆற்றலையும் ஒருங்கிணைக்க 'மை பாரத்' தளம் முக்கியப் பங்காற்றுவதாக அமைச்சர் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த பேச்சாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், இந்தியாவின் ஜி20 மற்றும் பிரிக்ஸ் தலைமைத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இளைஞர்களின் இந்த உற்சாகமான பங்கேற்பு, இந்தியாவை 2047-க்குள் ஒரு வளர்ந்த நாடாக மாற்றும் பயணத்திற்குப் பெரும் பலம் சேர்க்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274083®=3&lang=1
செய்தி அடையான எண்:2274083
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2274335)
आगंतुक पटल : 7