ஆவண படங்கள் வரலாறு, கலாச்சாரம், அனுபவங்களை எதிர்கால சந்ததியினருக்கு வழங்கி வருகின்றன
19வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவின் போது, “மனிதர்கள், முக்கியத் தருணங்கள், நினைவுகளைப் பதிவுசெய்யும் ஒரு கருவியாக ஆவணப்படம்” என்ற கருப்பொருளில் கருத்தரங்கு ஒன்றிற்கு இந்திய ஆவணப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த கருத்தரங்கில், திரைப்பட இயக்குநர்களான சுரேஷ் சர்மா, சஞ்சித் நார்வேகர், ரூபா பருவா, அம்ரிஷ் ராய் சௌத்ரி ஆகியோருடன் வானொலித் தொகுப்பாளர் யூனுஸ் கானும் ஒன்றிணைந்து, வரலாறு, கலாச்சாரம், கூட்டு நினைவுகளைப் பாதுகாப்பதில் ஆவணப்படங்களின் பங்களிப்பு குறித்து விவாதித்தனர்.
இந்தக் கருத்தரங்கில் ஆவணப்படத் தயாரிப்பு செயல்முறை குறித்துப் விரிவாக விவாதித்ததுடன், ஆவணப்படங்கள் சார்ந்த நிகழ்வுகள், தனிநபர்களின் பதிவுகளாக மட்டுமின்றி, சமூக, கலாச்சார, வரலாற்று அனுபவங்களின் முக்கிய ஆவணக் காப்பகங்களாகவும் செயல்படுகின்றன என்பதை வலியுறுத்தினர்.
ஆவணப்படத் தயாரிப்பில் ஆராய்ச்சி, உண்மை சரிபார்ப்பு,வலுவான கதைக்கள அமைப்பின் முக்கியத்துவம் குறித்து சுரேஷ் சர்மா எடுத்துரைத்தார். ஆவணப்படங்கள் அவற்றின் கதாபாத்திரங்களின் போராட்டங்களையும், உணர்வுகளையும், படம்பிடிக்கும்போது நினைவில் நிற்கக்கூடியவையாக மாறுகின்றன என்றும், ஆராய்ச்சியின் போது ஏற்படும் புதிய கண்டுபிடிப்புகள், பெரும்பாலும் ஒரு திரைப்படத்தின் கதைக்களத்தை மாற்றியமைக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274160®=3&lang=1
(Release ID: 2274160)
****
TV/SV/SH
रिलीज़ आईडी:
2274331
| Visitor Counter:
4