இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
உடல் தகுதி கொண்ட குடிமகன் ஆரோக்கியமான சமூகத்திற்கும், ஆரோக்கியமான சமூகம் வளமான தேசத்தின் அடித்தளமாகவும் அமைகின்றன: மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா
प्रविष्टि तिथि:
17 JUN 2026 12:30PM by PIB Chennai
ஃபிட் இந்தியா இயக்கம் மூலம் உடல் தகுதியை பேணுவதற்கும், ஆரோக்கியமான, சுறுசுறுப்பான தேசத்தை கட்டமைப்பதில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, மத்திய இளையோர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மும்பையில், வோர்லி கடற்கரைச் சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் மிதிவண்டிப் பாதையில் நடைபெற்ற ஃபிட் இந்தியா சைக்கிள் பேரணியை இன்று தொடங்கி வைத்தார்.
உடல் தகுதி, ஆரோக்கியமான வாழ்வியல் முறை மீதான பொதுமக்களின் ஆர்வம் அதிகரித்து வருவதை உறுதிசெய்யும் வகையில், இந்த நிகழ்ச்சியில், உடற்பயிற்சி ஆர்வலர்கள், மிதிவண்டி ஓட்டுநர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்.
இந்த சைக்கிள் பேரணியைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், உடல் தகுதியைப் பராமரிப்பதை மக்கள் இயக்கமாக உருவெடுக்கச் செய்யும் வகையில், சுறுசுறுப்பான, ஆரோக்கியமான வாழ்வியல் முறைகள் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் மத்திய அரசின் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துரைத்தார்.
திரைப்பட நடிகர்கள் ஜாக்கி ஷராஃப், தாஹா ஷா பதுஷா, ஐஸ்வர்யா ராஜ் பகுனி, ஒலிம்பிக் மல்யுத்த வீரரும், காவல் துணை ஆணையருமான நர்சிங் யாதவ் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.
ஃபிட் இந்தியா இயக்கம், நாடு முழுவதும் உள்ள மக்கள் ஆரோக்கியமான வாழ்வியல் முறையைக் கடைப்பிடிக்கவும், உடல் தகுதியை பராமரிப்பதை அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றிக் கொள்ளவும் ஊக்குவித்து வருவதாகக் கூறினார்.
சைக்கிள் பயணத்தின் முக்கியத்துவத்தை விரிவாக எடுத்துரைத்த அமைச்சர், நிலையான போக்குவரத்து முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் காரணமாக, எரிபொருள் விநியோகத்தில் சவாலான சூழல் நிலவி வரும் நிலையில், நீடித்த, சிறந்த போக்குவரத்து முறையாக சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டியது அவசியம் என்று அவர் தெரிவித்தார். சைக்கிள் பயணம் தனிப்பட்ட உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிப்பதுடன், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, எரிசக்தி சேமிப்பிற்கும் பங்களிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 'ஃபிட் இந்தியா' இயக்கத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளதாகவும், இது நாடு முழுவதும் வளர்ந்து வரும் உடல் தகுதி சார்ந்த கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது என்றும் டாக்டர் மாண்டவியா குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273889®=3&lang=1
***
SS/SV/SH
(रिलीज़ आईडी: 2274199)
आगंतुक पटल : 8