ரெயில்வே அமைச்சகம்
சரக்கு போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஏதுவாக மகாராஷ்டிராவில் சோம்தனே-சிக்லி இடையே இணைப்புப் பாதை அமைக்கும் திட்டத்திற்கு இந்திய ரயில்வே ஒப்புதல்
प्रविष्टि तिथि:
17 JUN 2026 2:30PM by PIB Chennai
மகாராஷ்டிரா மாநிலத்தில் ரயில் போக்குவரத்துத் திறனை அதிகரிக்கவும், சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்படும் முக்கிய நடவடிக்கையாக, மத்திய ரயில்வேயின் கீழ் 3.7 கி.மீ நீளமுள்ள சோம்தனே-சிக்லி இடையே இணைப்புப் பாதையை ரூ 172 கோடி செலவில் அமைக்க இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த புதிய இணைப்புப் பாதை, கர்ஜத் வழித்தடத்தில் அமைந்துள்ள சிக்லி, ரோஹா வழித்தடத்தில் அமைந்துள்ள சோம்தனே ஆகிய பகுதிகளுக்கு இடையே முக்கிய ரயில் போக்குவரத்துக்கான இணைப்பை உருவாக்கும். இதன் மூலம், நெரிசல் மிகுந்த பன்வேல் வழித்தடத்திற்கு மாற்றாக கர்ஜத் - ரோஹா வழித்தடங்களுக்கு இடையே தடையற்ற ரயில் போக்குவரத்தை மேற்கொள்ள முடியும்.
மும்பையில் மிக முக்கிய ரயில் சந்திப்புகளில் ஒன்றாக பன்வேல் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இது ரோஹா, ஜேஎன்பிடி, கர்ஜத், திவா ஆகிய நான்கு முக்கிய திசைகளிலிருந்தும் வரும் ரயில்களுக்கான சந்திப்பாக உள்ளது. தற்போது கர்ஜத், ரோஹா வழித்தடங்களுக்கு இடையே நேரடி ரயில் போக்குவரத்துக்கான வழித்தட இணைப்பு இல்லாத நிலையில், ரயில்கள் பன்வேல் சந்திப்பு வழியாகச் செல்ல வேண்டியுள்ளது. இது செயல்பாட்டுச் சிக்கல்களையும், போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்துகிறது. இந்த இணைப்புப் பாதையை அமைத்து நேரடி ரயில் போக்குவரத்து சேவையை வழங்குவதன் மூலம், ரயில் போக்குவரத்தைச் சீராக்கவும், ரயில்வே கட்டமைப்பின் செயல்திறனை மேம்படுத்தவும் முடியும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273961®=3&lang=1
***
SS/SV/SH
(रिलीज़ आईडी: 2274190)
आगंतुक पटल : 6